கேண்டீன் குத்தகை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.2.87 லட்சம் மோசடி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரியில் கேண்டீன் குத்தகைக்கு எடுத்து தருவதாக கூறி, ரூ. 2.87 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.புதுச்சேரி, வாணரப்பேட்டை, நாகமுத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சத்யா, 27; மாற்றுத்திறனாளி. எம்.பி.ஏ., பட்டதாரியான சத்யா, உப்பளம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே தள்ளுவண்டி

புதுச்சேரி-கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரியில் கேண்டீன் குத்தகைக்கு எடுத்து தருவதாக கூறி, ரூ. 2.87 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, வாணரப்பேட்டை, நாகமுத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சத்யா, 27; மாற்றுத்திறனாளி. எம்.பி.ஏ., பட்டதாரியான சத்யா, உப்பளம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார்.முருங்கப்பாக்கம் கணபதி நகர், காமராஜர் வீதியைச் சேர்ந்த அந்தோணிராஜ், 32; அவரது மனைவி பிரபாவதி, 36. வாணரப்பேட்டை, ஜெயராம் செட்டி தோட்டத்தில் வசிக்கும் இருவரும், கடந்த 2019ம் ஆண்டு, சத்யாவுக்கு அறிமுகமாகினர்.அப்போது, 'நாங்கள் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மெஸ் நடத்தி வருகிறோம். மருத்துவ கல்லுாரி அதிகாரிகளுடன் நன்கு பழக்கம் உள்ளது. மருத்துவமனையில கேண்டீன், குத்தகைக்கு எடுத்து தருகிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்கு ரூ. 3 லட்சம் தர வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.அதை நம்பி, நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.87 லட்சம் பணத்தை, அந்தோணிராஜ் தம்பதியிடம் கொடுத்துள்ளார்.பல மாதங்கள் கடந்தும் கேண்டீன் குத்தகைக்கு எடுத்து தரவில்லை. சந்தேகமடைந்த சத்யா, கடந்த 2020 டிசம்பர் மாதம், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார்.பிரபாவதி மெஸ் நடத்தி வருவதும், கேண்டீன் குத்தகைக்கு கொடுக்க டெண்டர் விடவில்லை என தெரிய வந்தது. அதையடுத்து, பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.'ரவுடிகளை வைத்து உன் கடையை காலி செய்து கொலை செய்து விடுவேன்' என அந்தோணிராஜ், பிரபாவதி மிரட்டி உள்ளனர்.இது தொடர்பாக சத்யா, ஒதியஞ்சாலை போலீசில் கடந்த ஏபரல் மாதமும், கிழக்கு எஸ்.பி.,யிடம் மே மாதம் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சத்யா புகார் மீது வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, ஒதியஞ்சாலை போலீசார் வாணரப்பேட்டை அந்தோணிராஜ், பிரபாவதி ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X