சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரபரப்பு இல்லாத கோடநாடு எஸ்டேட் : வழக்கம் போல தேயிலை தொழில் ஜரூர்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோத்தகிரி:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை மீண்டும் துவக்கப்பட்டு உள்ளதால், மாநிலம் முழுதும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எஸ்டேட்டில் வழக்கம் போல் தேயிலை உற்பத்தி ஜரூராக நடந்து வருகிறது.சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடக்கும் தேயிலை தரத்துக்கான போட்டியில், கோடநாடு எஸ்டேட் பல முறை, 'கோல்டன் லீப்' விருது பெற்றுள்ளது. இந்த தேயிலை தோட்டத்தின் நடுவே, சகல
 பரபரப்பு இல்லாத கோடநாடு எஸ்டேட் : வழக்கம் போல தேயிலை  தொழில் ஜரூர்

கோத்தகிரி:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை மீண்டும் துவக்கப்பட்டு உள்ளதால், மாநிலம் முழுதும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எஸ்டேட்டில் வழக்கம் போல் தேயிலை உற்பத்தி ஜரூராக நடந்து வருகிறது.

சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடக்கும் தேயிலை தரத்துக்கான போட்டியில், கோடநாடு எஸ்டேட் பல முறை, 'கோல்டன் லீப்' விருது பெற்றுள்ளது. இந்த தேயிலை தோட்டத்தின் நடுவே, சகல வசதிகளுடன் அமைந்துள்ளது தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களா.இந்நிலையில், 2017 ஏப்., 24ல் எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதுார் கொலை செய்யப்பட்டு, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில், 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., அரசு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட சயானிடம், கடந்த 17ம் தேதி விசாரணை நடத்தப்பட்டதால், இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது. கோடநாடு எஸ்டேட்டில் எவ்வித பரபரப்பும் இல்லாமல், வழக்கம்போல் அமைதியாக தேயிலை உற்பத்தி நடந்து வருகிறது.

தேயிலை தொழிலாளர்களின் நலன் கருதி, எவ்வித பிரச்னையும் இல்லாமல் இயங்கி வருகிறது. இங்கு, தொழிலாளர்களின் சம்பளம், தொழிற்சாலை மற்றும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட சில செலவினங்களுக்கு மட்டும் வங்கி வழியாக பணப் பரிமாற்றம் நடப்பதால், தொழிலாளர்களின் பணி தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X