நெட்டப்பாக்கத்தில் கஞ்சா விற்ற மூவர் கைது

Added : ஆக 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-நெட்டப்பாக்கத்தில் கஞ்சா விற்ற மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.நெட்டப்பாக்கம் கருமாதி கொட்டகை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்றனர்.போலீசாரை கண்டதும் மூன்று வாலிபர்கள் தப்பியோடினர். அவர்களை போலீசார்

புதுச்சேரி,-நெட்டப்பாக்கத்தில் கஞ்சா விற்ற மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.நெட்டப்பாக்கம் கருமாதி கொட்டகை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்றனர்.போலீசாரை கண்டதும் மூன்று வாலிபர்கள் தப்பியோடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து சோதனை நடத்தினர். மூவரும், 1 கிலோ 235 கிராம் கஞ்சாவை, சிறிய பொட்டலங்களாக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில், பிடிபட்ட வாலிபர்கள் நெட்டப்பாக்கம், சீனிவாசா நகர், 2வது குறுக்கு தெரு பிரகாஷ், 24; ஏரிப்பாக்கம் புதிய காலனி, 5வது தெரு விஜயபிரபாகரன் (எ) கதிர், 25; ராமரெட்டிக்குளம், மடுகரை மெயின்ரோடு சிவா (எ) லிங்கேஸ்வரன், 24; என தெரியவந்தது.மூவரையும் போலீசார் கைது செய்து, 1235 கிராம் கஞ்சா, 3 மொபைல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.கொரோனா பரிசோதனைக்கு பிறகு, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X