கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆணாக மாறியவருடன் செல்ல பெண் விருப்பம்: ஐகோர்ட் அனுமதி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
மதுரை:பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவருடன் ஏற்பட்ட நட்பால், அவருடன் செல்ல ஒரு பெண் விருப்பம் தெரிவித்ததை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதித்தது. ஒருவர் பெண்ணாக பிறந்தார்; 'திருநம்பி'யாக, 'டிரான்ஸ் மேன்' அடையாளம் காணப்பட்டார். டாக்டரின் ஆலோசனைப்படி ஹார்மோன் சிகிச்சையைத் துவக்கினார். தன் பெயரை ஆண் பெயராக மாற்றி அரசிதழில் பதிவு செய்தார். சென்னையில் ஒரு

மதுரை:பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவருடன் ஏற்பட்ட நட்பால், அவருடன் செல்ல ஒரு பெண் விருப்பம் தெரிவித்ததை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதித்தது.

ஒருவர் பெண்ணாக பிறந்தார்; 'திருநம்பி'யாக, 'டிரான்ஸ் மேன்' அடையாளம் காணப்பட்டார். டாக்டரின் ஆலோசனைப்படி ஹார்மோன் சிகிச்சையைத் துவக்கினார். தன் பெயரை ஆண் பெயராக மாற்றி அரசிதழில் பதிவு செய்தார். சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கும், தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

அப்பெண், 'தன் விருப்பப்படி வாழ விரும்புகிறேன்' என போலீசாருக்கு கடிதம் அனுப்பிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினார். அவரும், திருநம்பியும் மதுரையில் சந்தித்தனர்; பின் சென்னை சென்றனர். அங்கு ஒரு விடுதியில் அப்பெண் தங்கவைக்கப்பட்டார்.'பெண்ணை அவரதுபெற்றோர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். சட்டவிரோதமாக அவரது தந்தை தடுத்து வைத்துள்ளார். நானும், அப்பெண்ணும் சேர்ந்து வாழ சட்டம் அனுமதிக்கிறது.அவரை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என, ஆணாக மாறிய திருநம்பி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு உத்தரவு: மனுதாரர் மற்றும் பெண்ணிடம் விசாரித்தோம். அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சேர்ந்து வாழ்கின்றனர். மனுதாரர் ஒரு டிரான்ஸ் மேன் என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் பெண் கூறினார். பெண்ணின் தந்தை ஆட்சேபம் தெரிவித்தார். பெண் மேஜர்; அவரது விருப்பத்தின்படி மனுதாரருடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது. வழக்கு முடிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X