சிறுமியுடன் திருமணம் பூசாரி மீது வழக்கு பதிவு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சிறுமியை திருமணம் செய்த கோவில் பூசாரி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 21; கோவில் பூசாரி. தமிழக பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, கடந்த ஆண்டு மே மாதம், காதலித்து திருமணம் செய்துள்ளார்.சிறுமிக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு 18 வயது பூர்த்தியானது. நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை பிரசவத்திற்காக

புதுச்சேரி-சிறுமியை திருமணம் செய்த கோவில் பூசாரி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 21; கோவில் பூசாரி. தமிழக பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, கடந்த ஆண்டு மே மாதம், காதலித்து திருமணம் செய்துள்ளார்.சிறுமிக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு 18 வயது பூர்த்தியானது. நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.பெண்ணின் ஆதார் அட் டையை பரிசோதித்த டாக்டர், 17 வயதிலேயே திருமணம் நடந்ததை அறிந்து, லாஸ்பேட்டை போலீசுக்கு தகவல் தகவல் தெரிவித்தார்.போலீசார், தினேஷ்குமார் மீது, சிறார் திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X