துணை சபாநாயகர் தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது | Dinamalar

பொது செய்தி

இந்தியா

துணை சபாநாயகர் தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது

Added : ஆக 22, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபை துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல், வரும் 26ம் தேதி நடக்கிறது.புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி கடந்த மே 7ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.ஜூன் 16ல் சபாநாயகரும், 27ல் அமைச்சர்கள் பதவி ஏற்றனர். துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.இந்நிலையில், வரும் 26ம்

புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபை துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல், வரும் 26ம் தேதி நடக்கிறது.புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி கடந்த மே 7ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.ஜூன் 16ல் சபாநாயகரும், 27ல் அமைச்சர்கள் பதவி ஏற்றனர். துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.இந்நிலையில், வரும் 26ம் தேதி காலை 9:30 மணிக்கு, 15வது சட்டசபையின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் துவங்குகிறது.அன்றே துணை சபாநாயகர் தேர்தல் மற்றும் பதவியேற்பு நடைபெறும். என சபாநாயகர் செல்வம் நேற்று அறிவித்தார்.இதுகுறித்து சட்டசபை செயலர் முனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியின் 15வது சட்டசபையின் துணை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தும் தேதியாக, வரும் 26ம் தேதியை சபாநாயகர் நிர்ணயித்துள் ளார். அதற்கான மனுவை, இன்று (நேற்று) பகல் 12:00 மணி முதல், வரும் 25ம் தேதி பகல் 12:00 மணி வரை சட்டசபை செயலரிடம் வழங்கலாம். படிவங்களை சட்டசபை செயலரிடம் பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பான அறிவிப்பு, எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்வோரை ஒரு எம்.எல்.ஏ., முன் மொழிய, மற்றொரு எம்.எல்.ஏ., வழிமொழிய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதன்படி, வரும் 25ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும். ஒருவருக்கு மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தால், தேர்தல் நடைபெறும்.ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தால், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். இதற்கான அறிவிப்பை சபாநாயகர் சட்டசபையில் வெளியிடுவார். அதனைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பதவியேற்பு நடைபெறும்.என்.ஆர்.காங்., கட்சிக்கு ஒதுக்கீடுஎன்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி ஆட்சியில், துணை சபாநாயகர் பதவி என்.ஆர்.காங்., கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி, அக்கட்சியை சேர்ந்த இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வான ஆறுமுகம் துணை சபாநாயகர் பதவிக்கு நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார்.26ம் தேதி சட்டசபை கூட உள்ளதால், அரசு கொறடா மற்றும் முதல்வரின் பாராளுமன்ற செயலர் பதவிகளும் ஓரிரு நாளில் நிரப்பப்பட உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X