16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்

Added : ஆக 22, 2021
Share
தஞ்சாவூர்:திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை, போக்சோ சட்டத்தில்போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே நெய்வேலி செட்டிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 28.திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்த அவருடன், பட்டுக்கோட்டையை சேர்ந்த 16 வயது சிறுமியும் பணிபுரிந்துள்ளார். திருமணம் செய்து

தஞ்சாவூர்:திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை, போக்சோ சட்டத்தில்போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே நெய்வேலி செட்டிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 28.திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்த அவருடன், பட்டுக்கோட்டையை சேர்ந்த 16 வயது சிறுமியும் பணிபுரிந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியுடன் திருப்பூரிலேயே குடும்பம் நடத்தியுள்ளார்.

சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், திருப்பூரில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையில், சிறுமியை திருமணம் செய்ய மறுத்து, ராமகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். சிறுமியை அழைத்து வந்து, தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த பெற்றோர், பட்டுக்கோட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, வாட்டாத்திக் கோட்டை கிராமத்தில் தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X