கொரோனாவுக்கு இருவர் பலி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கொரோனா தொற்றால் காரைக்காலில் இரு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 3,501 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 59 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,22,832 ஆக உயர்ந்தது.ஜிப்மர் மற்றும் நெஞ்சக

புதுச்சேரி-கொரோனா தொற்றால் காரைக்காலில் இரு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 3,501 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 59 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,22,832 ஆக உயர்ந்தது.ஜிப்மர் மற்றும் நெஞ்சக மருத்துவமனையில், 151 பேர் சிகிச்சையில் உள்ள னர். 757 பேர் லேசான அறிகுறியுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 112 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை, 1,20,116 பேர் குணமடைந்து உள்ளனர்.காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 46 மற்றும் 65 வயதுடைய இரு பெண்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1808 ஆக அதிகரித்தது.தடுப்பூசிசுகாதார பணியாளர்கள் 4 பேர், முன்கள பணியாளர் ஒருவர், பொதுமக்கள் 618 பேர் நேற்று முன்தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.2வது டோஸ் உட்பட, இதுவரை 7,77,866 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X