சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை குண்டு வைத்து கொல்ல முயற்சி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பத்துார்:ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை, குண்டு வைத்து கொல்ல முயற்சி நடந்தது.திருப்பத்துார் மாவட்டம், கொண்ட கிந்தன பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு, 90. இவரது மகன் நரசிம்மன், 45. மாங்காய் ஒட்டு செடி வியாபாரம் செய்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா, 60 விவசாயி. இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவிக்கு யுவராஜ், 28 கார்த்திக், 24, என்ற இரு மகன்கள் உள்ளனர். இரண்டாவது
 ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை  குண்டு வைத்து கொல்ல முயற்சி

திருப்பத்துார்:ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை, குண்டு வைத்து கொல்ல முயற்சி நடந்தது.

திருப்பத்துார் மாவட்டம், கொண்ட கிந்தன பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு, 90. இவரது மகன் நரசிம்மன், 45. மாங்காய் ஒட்டு செடி வியாபாரம் செய்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா, 60 விவசாயி. இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவிக்கு யுவராஜ், 28 கார்த்திக், 24, என்ற இரு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு அனிதா, 27 என்ற மகள் உள்ளார்.


நிலம் விற்பனை

அனிதாவை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நரசிம்மன் திருமணம் செய்தார். இந்நிலையில், ராஜா தனக்கு சொந்தமான நிலத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெரியசாமி என்பவருக்கு விற்று விட்டார். அதை பெரியசாமியிடம்இருந்து நரசிம்மன், 50லட்சம் ரூபாய்க்கு கடந்தாண்டு வாங்கியுள்ளார். தன் நிலத்தை மருமகன் நரசிம்மனே வாங்கியதால் ஆத்திரமடைந்த ராஜா, முதல் மனைவி மகன்களான யுவராஜ், கார்த்திக் ஆகியோருக்கு விற்று விடும்படி கூறியுள்ளார். அதற்கு நரசிம்மன் சம்மதிக்கவில்லை. இதனால்,அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு சத்தம் கேட்டு நரசிம்மன் வீட்டை விட்டு வெளியே வந்தார். அவரை பார்த்ததும் யுவராஜ், கார்த்திக் தப்பியோடினர். சந்தேகமடைந்து வீட்டை சுற்றிப் பார்த்ததில், ஒயர் துண்டுகள் சிதறி கிடந்தன.


நிபுணர்கள்

தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் வந்து ஆய்வு செய்ததில், நரசிம்மன் வீட்டை சுற்றிலும் டெட்டனேட்டர் குச்சி வெடி குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது தெரிந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் டெட்டனேட்டர் குச்சிகளை பாதுகாப்பாக அகற்றினர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:நிலத்தை விற்காததால் ஆத்திரமடைந்த யுவராஜ், கார்த்திக் ஆகியோர் நரசிம்மன் குடும்பத்தினரை ஒழித்து கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்காக அதிகாலை 1:00 மணிக்கு நரசிம்மன் வீட்டை சுற்றிலும் 40 டெட்டனேட்டர் குச்சிகளை மண்ணில் புதைத்துள்ளனர்.

டெட்டனேட்டர் குச்சிகளை ஒயரில் இணைத்து அருகிலுள்ள மின் கம்பத்தில் ஒயர் மூலம் இணைத்து வெடிக்க முயன்றனர். ஒயரை சரி செய்து கொண்டிருந்தனர்.சத்தம் கேட்டு நரசிம்மன் வந்ததால், அவர்கள் தப்பியோடி உள்ளனர். டெட்டனேட்டர் குச்சிகள் மழையில் நனைந்து ஈரமானதால் வெடிக்கவில்லை. இதனால், நரசிம்மன், அவரது தந்தை சேட், மனைவி அனிதா, மற்றும் மூன்று குழந்தைகள் என ஆறு பேர் உயிர் தப்பினர். தப்பியோடிய யுவராஜ், கார்த்திக்கை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X