சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நரிக்குறவர் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ.24 ஆயிரம் திருட்டு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் நரிக்குறவரின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி 24 ஆயிரம் ரூபாயை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனி மகன் கமல், 27; நரிக்குறவர். இவர் நேற்று முன்தினம் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம்., மையத்திற்குச் சென்றார்.அங்கு பணம்

திண்டிவனம் : திண்டிவனத்தில் நரிக்குறவரின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி 24 ஆயிரம் ரூபாயை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனி மகன் கமல், 27; நரிக்குறவர். இவர் நேற்று முன்தினம் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம்., மையத்திற்குச் சென்றார்.அங்கு பணம் எடுக்கத் தெரியாததால், அங்கிருந்த அடையாளம் தெரியாத நபரிடம், 1,000 ரூபாய் எடுத்துக் கொடுக்கும் படி கமல் கூறியுள்ளார்.

அப்போது கமலின் ஏ.டி.எம்., பின் நெம்பரை அறிந்து கொண்ட அந்த நபர், பணத்தை எடுத்து கொடுத்து, தான் வைத்திருந்த வேறொரு ஏ.டி.எம்., கார்டை, அவரிடம் கொடுத்து அனுப்பினார்.அங்கிருந்து சென்ற கமலுக்கு, சற்று நேரத்தில் தனது வங்கிக்கணக்கில் இருந்து, 24 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X