பொது செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர் நியமனத்தில் அரசு தலையிடக்கூடாது: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சின்னமனுார்:''கோயில்களில் ஆகமவிதி, அர்ச்சகர் நியமனத்தில் அரசு தலையிடக் கூடாது,''என, ஹிந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா தெரிவித்தார்.தேனி மாவட்டம் சின்னமனுாரில் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஹிந்து முன்னணி ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர் துணை தலைவர் ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.பாலமுருகன்

சின்னமனுார்:''கோயில்களில் ஆகமவிதி, அர்ச்சகர் நியமனத்தில் அரசு தலையிடக் கூடாது,''என, ஹிந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா தெரிவித்தார்.

தேனி மாவட்டம் சின்னமனுாரில் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பான ஹிந்து முன்னணி ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர் துணை தலைவர் ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.பாலமுருகன் முன்னிலை வகித்தார்.மாநில இணை அமைப்பாளர் பொன்னையா பேசியதாவது:

கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு அர்ச்சகர்களை நியமித்து வருகிறது. இது பிரச்னையை ஏற்படுத்தும். எந்த மொழியில் பூஜை செய்வது, ஆகமவிதி, அர்ச்சகர்களாக யார் இருக்க வேண்டும் என்பதை பக்தர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு தலையிடாமல் இருக்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்குஅரசு ஒத்துழைப்பு தர வேண்டும், என்றார்.500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது என முடிவு செய்யப்பட்டது. கோட்ட செயலாளர் கணேசன், மாநில பேச்சாளர் ராஜகுருபாண்டியன் , பா.ஜ., ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X