லக்னோ: தற்போது ஆப்கானிஸ்தானில், பயங்கரவாத அமைப்பான தலிபான் அராஜகமாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த விவகாரத்தை அடுத்தாண்டு நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்த பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.

உ.பி., முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் ஏற்கனவே தலிபான்கள் பற்றி பேசத் துவங்கி விட்டார்.இங்குள்ள எதிர்க்கட்சியினர் சிலர், 'தலிபான்களின் போராட்டம் ஒரு சுதந்திர போராட்டம்' என்றனர். இதை மேற்கோள் காட்டி, 'பயங்கரவாதிகளை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள்' என பேச ஆரம்பித்துவிட்டார் யோகி ஆதித்யநாத்.

இதனால் அரண்டுபோன காங்., தலைவர்கள், 'தலிபான்களுடன் மத்திய அரசு ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளது' என்றனர். உ.பி.,யில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் தனித் தனியாகவே போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால் ஆப்கன் விவகாரத்தை தீவிரமாக பிரசாரம் செய்து, போட்டியே இல்லாமல் உ.பி.,யில் பா.ஜ., எளிதாக ஆட்சியைதக்க வைக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE