சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவரை கொன்ற மனைவி கைது

Added : ஆக 22, 2021
Share
Advertisement
பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கணவர் ரஞ்சித்குமார் சிங்கை 35,நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த மனைவி சத்யாவை 26 , போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ராஜூ மகன் ஆட்டோ டிரைவர் ரஞ்சித்குமார் சிங். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தடிகிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் மகள் சத்யாவுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன்
 கணவரை கொன்ற மனைவி கைது

பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கணவர் ரஞ்சித்குமார் சிங்கை 35,நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த மனைவி சத்யாவை 26 , போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ராஜூ மகன் ஆட்டோ டிரைவர் ரஞ்சித்குமார் சிங். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தடிகிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் மகள் சத்யாவுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் மகள் உள்ளார். சத்யா கணவர் மீதுசந்தேகப்பட்டு வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

ஆக. 18 இரவில் ரஞ்சித்குமார் சிங் கழுத்தில் காயத்துடன் படுக்கையில் இறந்து கிடந்தார். அவரின் தந்தை ராஜூ, மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தென்கரை போலீசாரிடம் தெரிவித்தார். சந்தேக மரணம் என டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் விசாரணை நடந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் ரஞ்சித்குமார் சிங் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதன் தொடர்ச்சியாக மனைவி சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் கொலை வழக்காக மாற்றி சத்யாவை கைது செய்தனர்.


குழந்தை கதறல்

தந்தை கொலை செய்யப்பட்டார். தாய் கைதாகிய நிலையில், போலீஸ் ஸ்டேஷன் வந்த குழந்தை தாயின்அரவணைப்புக்காககதறியது. இந்த சம்பவம் பெண் போலீசார் உட்பட அனைவரையும் கண் கலங்கச்செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X