பிச்சை எடுக்கும் நிலையில் ஊழியர்கள் மாநில துணைத் தலைவர் ஆதங்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிச்சை எடுக்கும் நிலையில் ஊழியர்கள் மாநில துணைத் தலைவர் ஆதங்கம்

Added : ஆக 22, 2021
Share
சிங்கம்புணரி:''குறைந்த ஓய்வூதியத்தால் சத்துணவு ஊழியர்கள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர்'' என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பி.பாண்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது,பல கட்ட போராட்டத்திற்கு பிறகும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை முந்தைய அ.தி.மு.க., அரசு ஏற்கவில்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எங்களது

சிங்கம்புணரி:''குறைந்த ஓய்வூதியத்தால் சத்துணவு ஊழியர்கள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர்'' என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பி.பாண்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,பல கட்ட போராட்டத்திற்கு பிறகும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை முந்தைய அ.தி.மு.க., அரசு ஏற்கவில்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எங்களது கோரிக்கைகள் நியாயமானவை என்று தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருக்கிறார். ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்றும் கூறியிருந்தார்.

ரூ.2 ஆயிரம் சிறப்பு ஓய்வூதியம் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாமல் சத்துணவு ஊழியர்கள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர்.அதை 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். 49 ஆயிரம் காலிப்பணியிடம் உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்.

ஒட்டுமொத்த ஓய்வூதிய தொகையை சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமாகவும், அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமாகவும் உயர்த்த வேண்டும். வரும் சட்டசபை கூட்டத் தொடரில் எங்களது கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். கடந்த காலங்களில் வழங்கப்படாத அகவிலைப்படியையும் வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X