சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை திறப்பு விழா

Added : ஆக 22, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை திறப்பு விழா நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.புதுப்பிக்கட்ட உழவர் சந்தையை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்து பேசுகையில், 'விழுப்புரம் நகராட்சிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் வந்து கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி 48 கடைகளோடு உழவர் சந்தையை
 விழுப்புரத்தில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை திறப்பு விழா

விழுப்புரம் : விழுப்புரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை திறப்பு விழா நடந்தது.

கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.புதுப்பிக்கட்ட உழவர் சந்தையை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்து பேசுகையில், 'விழுப்புரம் நகராட்சிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் வந்து கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி 48 கடைகளோடு உழவர் சந்தையை திறந்தார்.கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது' என்றார்.

தொடர்ந்து, விவசாயிகளுக்கு அடையாள அட்டை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மானியத்தோடு 10 பேருக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 30 ரூபாய் மதிப்பீட்டில் மழைத்துாவான் கருவி.உளுந்து விதை, தோட்டக்கலை துறை சார்பில் மானியத்தோடு 6 பேருக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 416 ரூபாய் மதிப்பீட்டில் நுண்ணீர் பாசன அமைப்பு, கத்தரி குழித்தட்டு நாற்று, மிளகாய் குழிநட்டு நாற்று ஆகிய நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.எஸ்.பி., ஸ்ரீநாதா, எம்.எம்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண் துறை இணை இயக்குனர் ரமணன், துணை இயக்குனர் கண்ணகி, உதவி இயக்குனர் பிரேமலதா, கலெக்டர் நேர்முக உதவியாளர் பெரியசாாமி, நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X