பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் முதலாமாண்டு துவக்கம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லுாரி முதல்வர் சண்முகம் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நாளை துவங்குகிறது.காலை 10:00

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லுாரி முதல்வர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நாளை துவங்குகிறது.காலை 10:00 மணியளவில் நடைபெறும் கலந்தாய்வில், சிறப்பு ஒதுக்கீட்டுக்கு உரிய மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். நாளை 23ம் தேதி பி.எஸ்சி., புள்ளியியல் துறைக்கும், 24ம் தேதி காலை பி.ஏ., தமிழ் பாடப்பிரிவுக்கும், பிற்பகல் பி.ஏ., பொருளாதாரம் பாடத்திற்கும் கலந்தாய்வு நடக்கிறது.

25ம் தேதி காலை பி.காம்., வணிகவியல் பாடத்திற்கும், பிற்பகல் பி.எஸ்சி., கணினி அறிவியல் பாடத்திற்கும் கலந்தாய்வு நடக்கிறது.மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாக தகவல் கிடைத்த மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்கள், சேர்க்கைக்கான கட்டணத்துடன் வரவேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X