பொது செய்தி

தமிழ்நாடு

பகுதிநேர ரேஷன் கடை

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அடுத்த புறவடை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். புகழேந்தி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அமைச்சர் பொன்முடி, ரேஷன் கடையை திறந்து வைத்து, மின்னணு ரேஷன் கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்கிப் பேசுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு
 பகுதிநேர ரேஷன் கடை

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அடுத்த புறவடை கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.

கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். புகழேந்தி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அமைச்சர் பொன்முடி, ரேஷன் கடையை திறந்து வைத்து, மின்னணு ரேஷன் கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்கிப் பேசுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் நடந்த உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் ரேஷன் கடை வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்து, புதிய பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மக்களுக்கான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றும்' என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பிரபாகரன், முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X