சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தம் திருடிய கும்பல் சிக்கியது

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கோவை:கோவை வனப்பகுதியில் யானை தந்தம் திருடிய கும்பல் சேலத்தில் சிக்கியது.சேலம் வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் சுங்கச்சாவடி பகுதியில் யானை தந்தங்களை விற்க வந்தவர்களிடம் கோவை வனத்துறை தனிப்படையினர்வியாபாரிகள் போல நடித்து ஒரு தந்தம் 10 லட்சம் ரூபாய் வரை விலை பேசினர். அவர்களிடம் இரண்டு தந்தங்கள் வாங்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.இதை நம்பி 11 கிலோ எடையுள்ள இரண்டு

கோவை:கோவை வனப்பகுதியில் யானை தந்தம் திருடிய கும்பல் சேலத்தில் சிக்கியது.

சேலம் வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் சுங்கச்சாவடி பகுதியில் யானை தந்தங்களை விற்க வந்தவர்களிடம் கோவை வனத்துறை தனிப்படையினர்வியாபாரிகள் போல நடித்து ஒரு தந்தம் 10 லட்சம் ரூபாய் வரை விலை பேசினர். அவர்களிடம் இரண்டு தந்தங்கள் வாங்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.இதை நம்பி 11 கிலோ எடையுள்ள இரண்டு தந்தங்களைக் கொண்டு வந்த ஐந்து பேரை கோவை வனத்துறை தனிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். இரண்டு தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சசிகுமார் 22, சேட்டு 41 ராமநாதபுரம் முதுகுளத்துாரை சேர்ந்த அருண்குமார் 40, மேட்டூரை சேர்ந்த பரத் 23, பிரவீன் குமார் 24 என தெரிந்தது. ஐந்து பேரையும் சேலம் தெற்கு வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X