சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.22 கோடி திமிங்கல கழிவுகள் விற்பனை செய்த நால்வர் கைது

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:தாழம்பூரை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதுாரிலும், 22 கோடி ரூபாய் மதிப்புடைய திமிங்கலத்தின் கழிவுகளை, வனத்துறையினர் நேற்று பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்தனர்.துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற கடலோர பகுதிகளிலிருந்து, திமிங்கலத்தின் கழிவுகளை கடத்தி வந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பதுக்கி விற்கப்படுவதாக,

ஸ்ரீபெரும்புதுார்:தாழம்பூரை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதுாரிலும், 22 கோடி ரூபாய் மதிப்புடைய திமிங்கலத்தின் கழிவுகளை, வனத்துறையினர் நேற்று பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்தனர்.

துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற கடலோர பகுதிகளிலிருந்து, திமிங்கலத்தின் கழிவுகளை கடத்தி வந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பதுக்கி விற்கப்படுவதாக, வனத்துறையைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.வனத்துறை எடுத்த நடவடிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் பகுதியில், 13 கோடி ரூபாய் மதிப்புடைய திமிங்கல கழிவுகளை பதுக்கி விற்பனை செய்த ஒன்பது பேர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட மாங்காடு பகுதியில், திமிங்கலம் கழிவுகள் பதுக்கி, ஆன்-லைன் வாயிலாக விற்கப்படுவதாக தகவல் வந்தது.ஸ்ரீபெரும்புதுார் வனசரகர் ராஜ்குமார் தலைமையிலான 10 பேர் குழுவினர், ஆன்-லைன் விளம்பரத்தை பார்த்து, திமிங்கல கழிவுகளை வாங்குவது போல் சென்றனர்.அங்கு திமிங்கல கழிவுகளை விற்க வந்த மதுரையைச் சேர்ந்த ஒருவர், சென்னையைச் சேர்ந்த மூவர் என நான்கு பேரை கைது செய்து, அந்த கழிவுகளை பறிமுதல் செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'ஒரு கிலோ திமிங்கலத்தின் கழிவு, சர்வதேச சந்தையில் 1 கோடி ரூபாய். மாங்காட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கழிவின் மதிப்பு 22 கோடி ரூபாய்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X