'அம்ருத் மஹோத்சவ்' : மத்திய அரசு ஆய்வு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
புதுடில்லி:யூனியன் பிரதேசங்களில், 'அம்ரூத் மஹோத்சவ்' கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது.நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை அம்ருத் மஹோத்சவ் என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விழா கடந்த, 15ல் துவங்கியது. அடுத்த ஆண்டு ஆக., 14 வரை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் யூனியன் பிரதேசங்களில் அம்ரூத் மஹோத்சவத்தை

புதுடில்லி:யூனியன் பிரதேசங்களில், 'அம்ரூத் மஹோத்சவ்' கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது.

நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை அம்ருத் மஹோத்சவ் என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விழா கடந்த, 15ல் துவங்கியது. அடுத்த ஆண்டு ஆக., 14 வரை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் யூனியன் பிரதேசங்களில் அம்ரூத் மஹோத்சவத்தை கொண்டாடுவதற்கன திட்டங்கள், ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது.

மத்திய உள்துறை அமைச்சக செயலர் அஜய் பல்லா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் யூனியன் பிரதேச தலைமை செயலர்கள் மற்றும் ஆலோசகர்கள் பங்கேற்றனர்.இந்திய கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அம்ரூத் மஹோத்சவ் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் பற்றி யூனியன் பிரதேச தலைமை செயலர்கள், உள்துறை செயலரிடம் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X