பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் வடிகால் வசதி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் மழை நீர் வடிகால் வசதி குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று காலை முதல் மழை பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் மழைநீர் வழிந்தோடியது. இதனையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் மழை நீர் வடிகால் வசதி குறித்து ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோவில்
 மழை நீர் வடிகால் வசதி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் மழை நீர் வடிகால் வசதி குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று காலை முதல் மழை பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் மழைநீர் வழிந்தோடியது. இதனையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் மழை நீர் வடிகால் வசதி குறித்து ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெரு, நகராட்சி மின் மயானம் அருகே கால்வாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து தென்கீரனுார் சாலையில், மழை நீர் மற்றும் கழிவு நீர் விவசாய நிலங்களுக்கு செல்லாத வகையில் ஜே.சி.பி., மூலம் சீரமைக்க நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து, அனைத்து வடிகால் பகுதிகளிலும் முறையாக மழைநீர் வெளியேறும் வகையில் அடைப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.நகராட்சி கமிஷனர் குமரன், பொறியாளர் பாரதி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X