பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாயை ஆக்கிரமித்து மூன்று தடுப்பணைகள்: அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை -வாடிப்பட்டி அருகே பரளி கண்மாய் நீர்வரத்து ஊத்துக் கால்வாயில் அனுமதியின்றி அமைத்த தடுப்பணைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.வாடிப்பட்டி புதுப்பட்டி அன்பழகன் தாக்கல் செய்த பொதுநல மனு: பரளி கண்மாய் தண்ணீர் வரத்திற்கு ஆதாரமாக ஊத்துக் கல்வாய் உள்ளது. இதில் அனுமதியின்றி சட்டவிரோதமாக 3 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை
 கால்வாயை ஆக்கிரமித்து மூன்று தடுப்பணைகள்: அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை -வாடிப்பட்டி அருகே பரளி கண்மாய் நீர்வரத்து ஊத்துக் கால்வாயில் அனுமதியின்றி அமைத்த தடுப்பணைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

வாடிப்பட்டி புதுப்பட்டி அன்பழகன் தாக்கல் செய்த பொதுநல மனு: பரளி கண்மாய் தண்ணீர் வரத்திற்கு ஆதாரமாக ஊத்துக் கல்வாய் உள்ளது. இதில் அனுமதியின்றி சட்டவிரோதமாக 3 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை மீட்டு தண்ணீர் வரத்தை சரி செய்யக்கோரி கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், வாடிப்பட்டி தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது.

பொதுப்பணித்துறை, 'அனுமதியின்றி கால்வாயின் குறுக்கே மணல் பைகளை கொண்டு சில விவசாயிகள் தடுப்பணைகள் அமைத்துள்ளனர். அதன் மூலம் அவர்களின் நிலத்தில் பாசனம் செய்கின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவர்கள் பாசனத்திற்கு வேறு நீராதாரம் இல்லை என்கின்றனர்' என அறிக்கை தாக்கல் செய்தது.நீதிபதிகள்: அனுமதியின்றி அமைத்த தடுப்பணைகளை பொதுப்பணித்துறை அகற்ற வேண்டும்.

வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட தனிநபர்கள் நீர்ப்பாசன தேவைக்காக தடுப்பணைகள் அமைக்க பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் மனு அளிக்க வேண்டும். அவர் தகுதி அடிப்படையில் விரைவில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
22-ஆக-202113:34:20 IST Report Abuse
Nakkeeran விவசாயிக்கு விவசாயியே எதிரி .காரணம் விவசாயிகள் பல கடசிகளை சார்ந்து பிளவு பட்டதனால் வந்த விளைவு
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
22-ஆக-202113:23:03 IST Report Abuse
Gandhi விவசாயிகள் எப்பவுமே நல்லவங்கன்னு எதிர் கட்சிகளும் தமிழ் சினிமாவும் சொல்லுது, ஆனால் நீதிமன்றம் விவசாயிகள் சட்டவிரோதமாக 3 தடுப்பணைகள் கட்டி அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்வதாக சொல்லுது யாரையும் நம்பமுடியல. விவசாயிகள் மாபியா போல செயல் படுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X