போலீஸ் செய்திகள்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
மின்சாரம் தாக்கி பெண் பலிசோழவந்தான்: வடகாடுபட்டி ஆனந்தன் மனைவி குளோரி 37. மளிகை, காய்கறி கடை வைத்துஉள்ளனர். இவர்களது வீட்டில் மராமத்து பணி நடக்கிறது.நேற்று மதியம் வீட்டின் போர்வெல் மின்மோட்டாரை இயக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.டிரைவர் பலிமேலுார்: திருமங்கலம் டிரைவர் பூபதி 48. நேற்று முன்தினம் இரவு மதுரையிலிருந்து வேனில் சரக்கு

மின்சாரம் தாக்கி பெண் பலிசோழவந்தான்: வடகாடுபட்டி ஆனந்தன் மனைவி குளோரி 37. மளிகை, காய்கறி கடை வைத்துஉள்ளனர். இவர்களது வீட்டில் மராமத்து பணி நடக்கிறது.நேற்று மதியம் வீட்டின் போர்வெல் மின்மோட்டாரை இயக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.டிரைவர் பலிமேலுார்: திருமங்கலம் டிரைவர் பூபதி 48. நேற்று முன்தினம் இரவு மதுரையிலிருந்து வேனில் சரக்கு ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு சென்றார். அதிகாலை 5:00 மணிக்கு மேலுார் மலம்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது எதிரே திருச்சியில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர் திடீரென திருப்பவே வேன் மீது மோதியது. இதில் பூபதி இறந்தார்.கால்வாயில் ஆண் பிணம்அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பெரியாற்று கால்வாய் அமுக்கு பாலத்தில் மிதந்த 35 வயது மதிக்கதக்க ஆண் பிணத்தை போலீசார் மீட்டனர். இறந்தவரின் வலது, இடது கைகளில் ஹரிஈஸ்வரன், துர்காதேவி என பச்சை குத்தப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.புகையிலை பறிமுதல்சோழவந்தான்: எஸ்.ஐ., முத்தையா மற்றும் போலீசார் நகரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பெட்டி கடையிலிருந்து தடை செய்யப்பட்ட ஒரு கிலோ புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்து அய்யங்கோட்டை செல்வகுமாரை 42, கைது செய்தனர்.எஸ்.ஐ.,க்குகமிஷனர் பாராட்டுமதுரை: மேலமடை, ஆவின் சந்திப்பு சிக்னலில் போக்குவரத்து எஸ்.ஐ., பழனியாண்டி, பணியின்போது மைக்கில் சாலை பாதுகாப்பு குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. தொடர்ந்து பேசி வரும் அவரது பணியை பாராட்டி நேற்று கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா பரிசு வழங்கினார். துணைகமிஷனர்ஈஸ்வரன், உதவிகமிஷனர் மாரியப்பன் உடனிருந்தனர்.அலைபேசிகள் திருட்டுவாடிப்பட்டி: எல்.புதுார் ரவீந்திரன் 43. பஸ் ஸ்டாண்ட் எதிரே அலைபேசி கடை வைத்துள்ளார். ஆக.,20 இரவு கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 8 அலைபேசிகள், மடிக்கணினியை திருடி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X