இன்றைய "கிரைம் ரவுண்ட் அப்"

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்ரூ.22 கோடி திமிங்கல கழிவுகள் விற்பனை செய்த நால்வர் கைதுஸ்ரீபெரும்புதுார்:தாழம்பூரை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதுாரிலும், 22 கோடி ரூபாய் மதிப்புடைய திமிங்கலத்தின் கழிவுகளை, வனத்துறையினர் நேற்று பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்தனர்.துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற கடலோர பகுதிகளிலிருந்து, திமிங்கலத்தின் கழிவுகளை கடத்தி வந்து
இன்றைய "கிரைம் ரவுண்ட் அப்"


தமிழக நிகழ்வுகள்

ரூ.22 கோடி திமிங்கல கழிவுகள் விற்பனை செய்த நால்வர் கைது
ஸ்ரீபெரும்புதுார்:தாழம்பூரை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதுாரிலும், 22 கோடி ரூபாய் மதிப்புடைய திமிங்கலத்தின் கழிவுகளை, வனத்துறையினர் நேற்று பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்தனர்.
துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற கடலோர பகுதிகளிலிருந்து, திமிங்கலத்தின் கழிவுகளை கடத்தி வந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பதுக்கி விற்கப்படுவதாக, வனத்துறையைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.வனத்துறை எடுத்த நடவடிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் பகுதியில், 13 கோடி ரூபாய் மதிப்புடைய திமிங்கல கழிவுகளை பதுக்கி விற்பனை செய்த ஒன்பது பேர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட மாங்காடு பகுதியில், திமிங்கலம் கழிவுகள் பதுக்கி, ஆன்-லைன் வாயிலாக விற்கப்படுவதாக தகவல் வந்தது.ஸ்ரீபெரும்புதுார் வனசரகர் ராஜ்குமார் தலைமையிலான 10 பேர் குழுவினர், ஆன்-லைன் விளம்பரத்தை பார்த்து, திமிங்கல கழிவுகளை வாங்குவது போல் சென்றனர்.அங்கு திமிங்கல கழிவுகளை விற்க வந்த மதுரையைச் சேர்ந்த ஒருவர், சென்னையைச் சேர்ந்த மூவர் என நான்கு பேரை கைது செய்து, அந்த கழிவுகளை பறிமுதல் செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'ஒரு கிலோ திமிங்கலத்தின் கழிவு, சர்வதேச சந்தையில்1 கோடி ரூபாய். மாங்காட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கழிவின் மதிப்பு 22 கோடி ரூபாய்' என்றனர்.

தந்தம் திருடிய கும்பல் சிக்கியது
கோவை:கோவை வனப்பகுதியில் யானை தந்தம் திருடிய கும்பல் சேலத்தில் சிக்கியது. சேலம் வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் சுங்கச்சாவடி பகுதியில் யானை தந்தங்களை விற்க வந்தவர்களிடம் கோவை வனத்துறை தனிப்படையினர்வியாபாரிகள் போல நடித்து ஒரு தந்தம் 10 லட்சம் ரூபாய் வரை விலை பேசினர். அவர்களிடம் இரண்டு தந்தங்கள் வாங்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.இதை நம்பி 11 கிலோ எடையுள்ள இரண்டு தந்தங்களைக் கொண்டு வந்த ஐந்து பேரை கோவை வனத்துறை தனிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். இரண்டு தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

தூங்கிய பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு
சின்னசேலம் : சின்னசேலம் அருகே வீட்டில் துாங்கிய பெண்ணிடம் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். சின்னசேலம் அடுத்த வி.கூட்ரோடு, ராயப்பனுார் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 33; இவரது மனைவி புவனேஸ்வரி, 22; நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.நள்ளிரவு 1:00 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், புவனேஸ்வரி அணிந்திருந்த ஏழரை சவரன் தாலிச் செயினை பறித்தார். திடுக்கிட்டு எழுந்த புவனேஸ்வரி கூச்சலிட்டதும் செயினுடன் தப்பியோடினார்.சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கணவரை கொன்ற மனைவி கைது
பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கணவர் ரஞ்சித்குமார் சிங்கை 35,நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த மனைவி சத்யாவை 26 , போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ராஜூ மகன் ஆட்டோ டிரைவர் ரஞ்சித்குமார் சிங். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தடிகிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் மகள் சத்யாவுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் மகள் உள்ளார். சத்யா கணவர் மீதுசந்தேகப்பட்டு வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
ஆக. 18 இரவில் ரஞ்சித்குமார் சிங் கழுத்தில் காயத்துடன் படுக்கையில் இறந்து கிடந்தார். அவரின் தந்தை ராஜூ, மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தென்கரை போலீசாரிடம் தெரிவித்தார். சந்தேக மரணம் என டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் விசாரணை நடந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் ரஞ்சித்குமார் சிங் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதன் தொடர்ச்சியாக மனைவி சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் கொலை வழக்காக மாற்றி சத்யாவை கைது செய்தனர்.


பெண் போலீஸ் கொலை; கணவர் கைது
விருதுநகர்:விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் பானுப்பிரியாவை 32, கழுத்தை பெல்டால் இறுக்கி கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய அவரது கணவரான மதுரை போக்குவரத்து கழக கண்டக்டர் விக்னேஷ்வரன் 35, கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் வி.டி.மில்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் பானுபிரியா. இவருக்கும் விக்னேஷ்வரனுக்கு 6 ஆண்டுக்கு முன் திருமணமானது. இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு மதுபோதையில் இருந்த விக்னேஷ்வரன், பானுபிரியாவிடம் ஏ.டி.எம்., கார்டு கேட்டு சண்டையிட்டார்.
பானுபிரியாவை தனியறையில் அடைத்த விக்னேஷ்வரன் உள்ளே போய் கதவை பூட்டிக் கொண்டார். சிறிது நேரத்துக்கு பின் உறவினர்களிடம் அலைபேசியில் பேசிய விக்னேஷ்வரன், பானுபிரியா தற்கொலை செய்ததாக கூறினார்.சூலக்கரை போலீசார் பார்த்தபோது இறந்து கிடந்த பானுபிரியா அருகே பெல்ட் கிடந்தது. அவரது கழுத்தை பெல்டால் இறுக்கி விக்னேஷ்வரன் கொலை செய்தது தெரிந்தது. விக்னேஷ்வரன் கைது செய்யப்பட்டார்.

பஸ் பயணியிடம் 6 சவரன் நகை கொள்ளை
செஞ்சி : செஞ்சியில் பஸ் பயணியிடம் 6 சவரன் நகையை அபேஸ் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செஞ்சி அடுத்த திக்காமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன் மனைவி பரிமளா, 36; இவர், புதுச்சேரியில் இருந்து, நேற்று மதியம் 1:30 மணிக்கு செஞ்சி பஸ் நிலையம் வந்தவர், திக்காமேடு செல்ல திருவண்ணாமலை செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார்.பஸ் செஞ்சி கூட்ரோடு சென்றதும் கையில் இருந்த கட்டை பையை பார்த்தபோது, 3 சவரன் நெக்லஸ், 3 சவரன் செயின் மற்றும் 1,500 ரூபாய் வைத்திருந்த பர்ஸ் திருடு போயிருப்பது தெரியவந்தது.புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.


latest tamil newsஇந்திய நிகழ்வுகள்

தற்கொலைக்கு விஷம் வழங்குவதா? 'இ - காமர்ஸ்' நிறுவனம் மீது புகார்!
இந்துார் : மகன் தற்கொலை செய்ய விஷம் வழங்கியதாக, 'இ - காமர்ஸ்' நிறுவனம் எனப்படும் மின்னணு வர்த்தக நிறுவனம் ஒன்றின் மீது, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.
வழக்கு பதிவு மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்தவர் ரஞ்சித் வர்மா; பழ வியாபாரி. இவரது மகன் ஆதித்யன், 29. இவர் சமீபத்தில் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆதித்யன், மறுநாள் இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்துார் போலீசில் ரஞ்சித் வர்மா அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:என் மகன், 'சல்பாஸ்' என்ற விஷத்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். 'நோட்டீஸ்'இந்த விஷத்தை, அவர் மின்னணு வர்த்தக நிறுவனம் ஒன்றின் இணையதளம் வாயிலாக வாங்கிஉள்ளார். அந்த நிறுவனம் எந்த வித ஆவணத்தையும் கேட்காமல் சல்பாஸ் விஷத்தை வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் விஷத்தை வழங்காமல் இருந்திருந்தால், என் மகன் தற்கொலை செய்திருக்க மாட்டார். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்னணு வர்த்தக நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு, போலீசார் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X