சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வடக்கு மண்டல ஐ.ஜி., சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி.,க்கள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி ஜியாவுல்ஹக், கடலுார் சக்திகணேஷ் ஆகியோர் முன்னிலை
 சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு  குறித்த ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வடக்கு மண்டல ஐ.ஜி., சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார்.

டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி.,க்கள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி ஜியாவுல்ஹக், கடலுார் சக்திகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மூன்று மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பிற்காக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஐ.ஜி., ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், 'மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். பழைய குற்றவாளிகள் நடமாட்டத்தைக் கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பிருந்தால், முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும்.மணல் கொள்ளை நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

சாலை விபத்துகளைத் தடுக்க முக்கிய சாலைகளில் தடுப்பு கம்பிகள் அமைத்து சீரான வேகத்தில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில், சாராயம் கடத்தலைத் தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X