புதுடில்லி: சமீபத்தில் பார்லி., நடவடிக்கைகள் முடக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல் 'ஜவஹர்லால் நேரு சிறந்த தலைவர்' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது, பா.ஜ.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமரானதிலிருந்து, கட்கரிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. சாலை போக்குவரத்து துறையின் அமைச்சராக உள்ள கட்கரி, எந்த எம்.பி., வந்து தங்கள் தொகுதிக்கு சாலை போட வேண்டும் என கேட்டாலும் உடனே சம்மதம் தெரிவித்து விடுகிறார். இது தான் பிரச்னைக்கு காரணம் என்கின்றனர்.
'பல முக்கிய போக்குவரத்து திட்டங்கள் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில், இப்படி பல திட்டங்களை ஒத்துக் கொண்டால் அதற்கு நிதிக்கு எங்கே போவது; இருக்கும் திட்டங்களை முதலில் முடியுங்கள்' என, ஒரு முறை கட்கரியிடம், பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும், மஹாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தலில் தேவேந்திர பட்னவிசை, பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது கட்கரிக்கு பிடிக்கவில்லை. இவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தும், கட்கரியை அமைச்சர் பதவியில் இருந்து துாக்க முடியாததற்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் அவருக்கு உள்ள நெருக்கம் தான் காரணமாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE