கூரை வீடு தீப்பிடித்து சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூரை வீடு தீப்பிடித்து சேதம்

Added : ஆக 22, 2021
Share
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கூரை வீடு தீப்பிடித்தது எரிந்து சேதமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 35; தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி. இவர், கெடிலத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் பெரும்பாக்கத்தில் உள்ள இவரது கூரை வீடு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கூரை வீடு தீப்பிடித்தது எரிந்து சேதமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 35; தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி. இவர், கெடிலத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் பெரும்பாக்கத்தில் உள்ள இவரது கூரை வீடு தீ பிடித்து எரிந்து சேதமானது.வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, தடயவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்தனர்.திருநாவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X