பொது செய்தி

தமிழ்நாடு

மனதில் ஆனந்தம் பொங்கும்... வாழ்வில் மேன்மை, எங்கும்! பிரபலமாகும் 'கேட்டட் கம்யூனிட்டி' வீடுகள்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஒரே வளாகத்திற்குள், ஜிம், நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் இருக்கும். டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட் போன்றவையும் இருக்கும். நுழைவாயில் வழியாக வீடுகளின் உரிமையாளர்களோ, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களோ மட்டும்தான் நுழைய முடியும்.சுவர்களை தாண்டி உள்ளுக்குள் வேறு யாரும் வர முடியாது. வளாகத்துக்குள் நடைப்பயிற்சிக்கான பாதை இருக்கும். போக்குவரத்து போன்ற இடைஞ்சல்

ஒரே வளாகத்திற்குள், ஜிம், நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் இருக்கும். டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட் போன்றவையும் இருக்கும். நுழைவாயில் வழியாக வீடுகளின் உரிமையாளர்களோ, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களோ மட்டும்தான் நுழைய முடியும்.சுவர்களை தாண்டி உள்ளுக்குள் வேறு யாரும் வர முடியாது. வளாகத்துக்குள் நடைப்பயிற்சிக்கான பாதை இருக்கும். போக்குவரத்து போன்ற இடைஞ்சல் இல்லாமல் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். பல குடும்பங்கள் ஒரே வளாகத்தில் இருக்கும்போது அவர்களது சமூக வாழ்க்கையும், ஒருங்கிணைந்து செயல்படும் தன்மையும் அதிகரிக்கும்.இதுதான் 'கேட்டட் கம்யூனிட்டி' வீடுகள்; திருப்பூரில், இ வை பிரபலமடைய துவங்கியிருக்கின்றன.'நகருக்குள் இருக்கணும், அதேசமயம் பிரைவசியும் வேணும்' என்பதை அடிப்படையாக கொண்டே இன்று பெரும்பாலானோர் வீடு தேடி வருகின்றனர்.

இதற்கு, 'கேட்டட் கம்யூனிட்டி'தான் சிறந்தது.வில்லங்கம் இல்லாத வீடுசில நாட்களில் விருந்தாளிகள் அதிக அளவில் வந்தபோதும் அவர்கள் வண்டிகளை நிறுத்துவதற்கு போதிய இடம் இருக்கும். வாங்கிய வீட்டை உரிய விலைக்கு வாடகைக்கு விட முடியும். அந்த விதத்தில் ஒரு நல்ல முதலீடு. பலரும் வங்கி கடனை கொண்டு வீடு வாங்கி இருப்பர்.பல வங்கிகளின் வக்கீல்கள் ஆவணங்களை சரிபார்த்திருப்பர் என்பதால் வில்லங்கம் இல்லாத வீடு உங்கள் கைக்கு வந்து சேர வாய்ப்பு அதிகம். குப்பை, சாக்கடை போன்ற தொல்லைகள் இல்லாமல் ஆரோக்கியமான சூழலில் நம்மால் இருக்க முடியும்.
விற்பதும் எளிது!பிற வீட்டு உரிமையாளர்களுடன் தொடர்பு ஏற்படுவது என்பது பலவிதங்களில் உதவியாக இருக்கும். தொழில் முறையில்கூட இது உதவலாம். ஏதாவது அவசரம் ஏற்படும்போது உதவுவதற்கு சிலராவது இருப்பர்.பின்னாளில் நீங்கள் விற்க நினைத்தால் இதை விற்க அதிக முயற்சி எடுத்து கொள்ள வேண்டி இருக்காது. பசுமை சூழல் காணப்படும். எனவே ஆரோக்கியமான காற்று இங்கே கிடைக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகளுக்கான பூங்கா இருப்பதால் அது இளம் பெற்றோருக்கு வசதியாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X