ராகுல் பற்றி அநாகரிக பேச்சு; அமைச்சருக்கு காங்., கண்டனம்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
மும்பை-காங்கிரஸ் எம்.பி. ராகுலை அநாகரிகமாக பேசிய மத்திய அமைச்சருக்கு காங். கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.மஹாராஷ்டிர மாநிலத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரயில்வே நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சரும் பா.ஜ. வைச் சேர்ந்தவருமான தான்வே ராவ்சாகிப் தாதாராவ் பேசியதாவது:கிராமங்களில் காளை மாட்டை கோவிலுக்கு நேர்ந்து விடுவர். அந்த மாட்டால் யாருக்கும் எந்த
ராகுல், அநாகரிக பேச்சு, அமைச்சர், காங்., கண்டனம்

மும்பை-காங்கிரஸ் எம்.பி. ராகுலை அநாகரிகமாக பேசிய மத்திய அமைச்சருக்கு காங். கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரயில்வே நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சரும் பா.ஜ. வைச் சேர்ந்தவருமான தான்வே ராவ்சாகிப் தாதாராவ் பேசியதாவது:கிராமங்களில் காளை மாட்டை கோவிலுக்கு நேர்ந்து விடுவர். அந்த மாட்டால் யாருக்கும் எந்த உபயோகமும் இருக்காது.போக்குவரத்துக்கோ விவசாய பணிகளுக்கோ கூட அதனால் பயன் கிடையாது. விளைநிலங்களில் அது மேய்ந்தாலும் விவசாயி அதை மன்னித்து விடுவார். அதுபோலத்தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கோவில் மாடு போல திரிகிறார். அவரால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


மத்திய அமைச்சரின் இந்த பேச்சு காங். வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. காங். கட்சியின் மஹாராஷ்டிர மாநில தலைவர் நானா படோலே கூறுகையில் ''நாகரிகமற்ற முறையில் பேசியுள்ள மத்திய அமைச்சர் தான்வே ராஜினாமா செய்ய வேண்டும். அவர் எல்லை தாண்டி பேசியுள்ளார்'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
22-ஆக-202116:10:14 IST Report Abuse
Vijay D Ratnam தப்பா என்ன சொல்லிட்டாரு. கரெக்ட்டாத்தானே சொல்லியிருக்காரு மத்திய இணையமைச்சர். அந்தாளு எதுக்கும் லாயக்கில்லை என்றாலும் அந்த ஆளு மீது பாஜகவினருக்கே பெரிதாக கோபம் வருவதில்லை.
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
22-ஆக-202114:59:28 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN உண்மையை சொன்னால் சிலருக்கு கோபம் வரத்தான் செய்யும். உண்மை சில சமயங்களில் கசக்கும்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
22-ஆக-202114:51:20 IST Report Abuse
r.sundaram சரியாகத்தான் பேசி இருக்கிறார். எந்த ஒரு பொறுப்பும் வேண்டாம், எந்த பதவியும் வேண்டாம், ஆனால் அதிகாரம் மட்டும் வேண்டும் என்றால், அது கோவில் மாடு தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X