சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபாட்டில்களை காரில் கடத்தியவர் மீது வழக்கு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
விழுப்புரம் : புதுச்சேரி மதுபாட்டில்களை காரில் கடத்திய வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.விழுப்புரம் மாவட்டம் கிளியனுார் சோதனை சாவடியில் நேற்றிரவு 9.45 மணிக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வந்த ஸ்கார்பியோ காரை போலீசார் நிறுத்தி

விழுப்புரம் : புதுச்சேரி மதுபாட்டில்களை காரில் கடத்திய வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கிளியனுார் சோதனை சாவடியில் நேற்றிரவு 9.45 மணிக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வந்த ஸ்கார்பியோ காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 624 மதுபாட்டில்கள் மறைத்து கடத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

காரை, ஓட்டி வந்தவரிடம் விசாரித்ததில், அவர் வேலுார் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பத்துார் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதை போலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X