பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை கட்டடங்களே

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஒருவரை பார்த்தவுடன், இவர் எத்தகையவர் என்பதை படம்போட்டு காட்டிவிடும், முகம். அதுபோல், ஒரு நிறுவனம் எப்படிப்பட்டது என்பதை, அந்நிறுவனத்தின் கட்டுமானம் பிரதிபலித்து விடுகிறது. இதனால்தான், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், கட்டுமானத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. குறிப்பாக, உலக சந்தைக்காக ஆடை தயாரிக்கும் ஏற்றுமதி நிறுவனத்தினர், கட்டடங்களை,

ஒருவரை பார்த்தவுடன், இவர் எத்தகையவர் என்பதை படம்போட்டு காட்டிவிடும், முகம். அதுபோல், ஒரு நிறுவனம் எப்படிப்பட்டது என்பதை, அந்நிறுவனத்தின் கட்டுமானம் பிரதிபலித்து விடுகிறது. இதனால்தான், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், கட்டுமானத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. குறிப்பாக, உலக சந்தைக்காக ஆடை தயாரிக்கும் ஏற்றுமதி நிறுவனத்தினர், கட்டடங்களை, பார்த்துப்பார்த்து கட்டுகின்றனர்.உற்பத்தி பெருக்கம், தொழிலாளர் பாதுகாப்பு, இயற்கை பாதுகாப்புக்கு கைகொடுக்கும் வகையில், கட்டுமானங்களை வடிவமைக்கின்றனர். ஆடை உற்பத்தி நிறுவனங்களை பொருத்தவரை, நிர்வாக அலுவலகம், உற்பத்தி பிரிவுகளை உள்ளடக்கியதாக செயல்படுகிறது. தொழிலாளர் பாதுகாப்புக்காக, அவசர கால வழி, சாய்தளங்கள், ஜன்னல்கள் போதுமான எண்ணிக்கையில் அமைக்கப்படுகின்றன.ஆடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக, 'லைன் சிஸ்டம்' என்கிற வழிமுறை பின்பற்றப்படுகிறது. இதற்கேற்ப, நிறுவன கட்டுமானங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஒரு அரங்கிலேயே, அடுத்தடுத்து, கட்டிங், தையல், காஜாபட்டன், செக்கிங், அயர்னிங், பேக்கிங் பிரிவுகள் இணைந்து இயங்குகின்றன.சமீபகாலமாக பசுமைக்கு திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், வெளிநாட்டு வர்த்தகரை கவர்ந்திழுப்பதற்காகவும், தங்கள் நிறுவன கட்டுமானங்களை 'கிரீன் பில்டிங்' ஆக உருவாக்குகின்றனர், ஏற்றுமதி ஆடை உற்பத்தியாளர்கள். நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. நிறுவனங்களின் மேற் கூரைகளில் சூரிய ஒளி தகடுகளை பொருத்தி, மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறதது. பசுமை கட்டடங்களால், இயற்கை பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, வெளிநாட்டு வர்த்தகர் மத்தியில் நிறுவனங்களின் மதிப்பும் உயர்கிறது.இயந்திரங்கள் கொள்முதலுக்கு வழங்குவதுபோல், நிறுவனங்களின் கட்டுமானங்களுக்கும் அரசு சலுகைகள் வழங்கி, ஊக்கப்படுத்த வேண்டும்; கட்டுமானங்களுக்கு தேவையான எல்லா அனுமதியையும் ஒரே இடத்தில் பெறும் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பது, பின்னலாடை துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.இயந்திரங்கள் கொள்முதலுக்கு வழங்குவதுபோல், நிறுவனங்களின் கட்டுமானங்களுக்கும் அரசு சலுகைகள் வழங்கி, ஊக்கப்படுத்த வேண்டும்.ஆடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக,'லைன் சிஸ்டம்' என்கிற வழிமுறை பின்பற்றப்படுகிறது. இதற்கேற்ப, நிறுவன கட்டுமானங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இயந்திரங்கள் கொள்முதலுக்கு வழங்குவதுபோல், நிறுவனங்களின் கட்டுமானங்களுக்கும் அரசு சலுகைகள் வழங்கி, ஊக்கப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X