பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த வீடு கனவு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
தொற்று பரவல், பொருளாதார ரீதியான முடக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். அதேசமயம், புதிய சாத்தியங்களையும் இது ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, பலருக்கும் சொந்த வீடு கனவு சாத்தியமாகியிருக்கிறது.தொற்று பரவலை தொடர்ந்து, பலரும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற உணர்வைக் கொண்டுள்ளனர். 'இந்திய ரியல் எஸ்டேட் அறிக்கை 2020' என்ற சர்வேயில், 89 சதவீதத்தினர் இந்த உணர்வை

தொற்று பரவல், பொருளாதார ரீதியான முடக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். அதேசமயம், புதிய சாத்தியங்களையும் இது ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, பலருக்கும் சொந்த வீடு கனவு சாத்தியமாகியிருக்கிறது.தொற்று பரவலை தொடர்ந்து, பலரும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற உணர்வைக் கொண்டுள்ளனர். 'இந்திய ரியல் எஸ்டேட் அறிக்கை 2020' என்ற சர்வேயில், 89 சதவீதத்தினர் இந்த உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.சர்வேயில் பதிலளித்த இளைஞர்கள் பெரும்பாலானோர், புதிய வீடு வாங்குவது குறித்து ஆர்வம் தெரிவித்துள்ளனர். 25 -- 40 வயதுடையவர்களில் 63 சதவீதத்தினர் புதிய சொத்துகளை வாங்க ஆர்வமாக உள்ளனர். கடந்த வருடம் இது வெறும் 49 சதவீதமாக இருந்தது.2020ம் ஆண்டு ஜூலை -- செப்டம்பரில் நடைபெற்ற விற்பனையைக் காட்டிலும் அக்டோபர் - -டிசம்பர் மாதம் 51 சதவீதம் அளவு விற்பனை உயர்ந்துள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரூ, டெல்லி, புனே, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய முக்கிய ஏழு நகரங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. நம்பகமான முதலீடாகவும், தங்கள் கனவு நனவாதலையும், சொந்த வீட்டை இளைஞர்கள் பார்க்கத் துவங்கியிருக்கின்றனர்.ரியல் எஸ்டேட் சேவை நிறுவனம் ஒன்றின் தரவுகளின்படி கடந்த அக்டோபர் - - டிசம்பர் காலாண்டில் முக்கிய ஏழு நகரங்களில் விற்பனைகள் அதிகரித்துள்ளன. பெருந்தொற்று காலத்தில் சொந்த வீட்டின் தேவை மேலும் உணரப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.''பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் வசதியை வழங்கியுள்ளதால் பலர் தங்கள் சொந்த இடத்தில் தங்களுக்கு பிடித்த சூழலில் இருந்து பணிபுரிய விரும்புகின்றனர். மேலும் குறைந்த வட்டி கொண்ட வீட்டுக் கடன்கள், ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும் வகையில், அரசு திட்டங்களுடன் குறைந்த விலை போன்ற வசதிகளால் விற்பனைகள் அதிகரித்துள்ளன. வரிச்சலுகை பெற இயலும் இடங்களில் மக்கள் வீடு வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்'' என்கின்றனர் ரியல் எஸ்டேட் துறையினர்.கடந்த ஆண்டு அரசால் வழங்கப்பட்ட உதவிகள் இந்தாண்டில் பலன் தருகிறது, ஆம்... இந்தாண்டு, சொந்த வீடு கனவு பலருக்கும் சாத்தியமாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X