பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்ட கோர்ட்டுகளில்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கடலுார் : சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில், கடலுார் மாவட்ட கோர்ட்டுகளில் வரும் செப்., 11ம் தேதி லோக் அதாலத்நடத்தப்படுகிறது.கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்கு தொடுப்பவர் விரைந்து தீர்வை பெற சுப்ரீம் கோர்ட்டால் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, லோக்

கடலுார் : சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில், கடலுார் மாவட்ட கோர்ட்டுகளில் வரும் செப்., 11ம் தேதி லோக் அதாலத்நடத்தப்படுகிறது.கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்கு தொடுப்பவர் விரைந்து தீர்வை பெற சுப்ரீம் கோர்ட்டால் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, லோக் அதாலத் (தேசிய மக்கள் நீதிமன்றம்) நடத்தப்படுகிறது.

வரும் செப்., 11ம் தேதி கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நடக்கிறது.நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில எடுப்பு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கிக்கடன் வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் மற்றும்நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளில் நிரந்த தீர்வு காணவும், வழக்கு தொடரப்படாத கல்விக் கடன், விவசாயக் கடன், தனிநபர்கடன் குறித்த வழக்குகளும் வங்கிகள் வாயிலாக சமரசம் பேசி தீர்வுகாணப்படும்.இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வழக்குகளில் விரைந்து தீர்வு காணலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X