பொது செய்தி

தமிழ்நாடு

29 ஆயிரம் தடுப்பூசி 'டோஸ்' வந்தது!

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தின் தடுப்பூசி மருந்து தேவைக்கு ஏற்ப, வாரத்தின் இரண்டு அல்லது மூன்று முறை 'கோவாக்ஸின்', 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று, 27 ஆயிரத்து, 500 'டோஸ்' கோவிஷீல்டு, 1,920 'கோவாக்ஸின்', என, மொத்தம், 29 ஆயிரத்து, 420 'டோஸ்' தடுப்பூசி மருந்து திருப்பூருக்கு வந்தது.இவற்றை மாநகராட்சியில் உள்ள மாநகராட்சி நகர் நல மையம்,

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தின் தடுப்பூசி மருந்து தேவைக்கு ஏற்ப, வாரத்தின் இரண்டு அல்லது மூன்று முறை 'கோவாக்ஸின்', 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று, 27 ஆயிரத்து, 500 'டோஸ்' கோவிஷீல்டு, 1,920 'கோவாக்ஸின்', என, மொத்தம், 29 ஆயிரத்து, 420 'டோஸ்' தடுப்பூசி மருந்து திருப்பூருக்கு வந்தது.இவற்றை மாநகராட்சியில் உள்ள மாநகராட்சி நகர் நல மையம், தாலுகாவில் உள்ள மேம்படுத்தப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையம் வாரியாக பிரிக்கும் பணி நேற்றிரவு நடந்தது. இன்று அல்லது நாளை தடுப்பூசி முகாம் நடப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கூடுதல் தடுப்பூசி கோரிக்கையை ஏற்று, 29 ஆயிரம் டோஸ் தடுப்பூசி அனுப்பபட்டுள்ளது. தற்போது, வாரத்தில் மூன்று நாட்கள் முகாம் நடத்தப்படுகிறது. செப்., துவக்கம் முதல் தினசரி முகாம் நடத்த தேவையான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இம்மாதம் மட்டும் இதுவரை மூன்று தவணையாக, 64 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X