தமிழ்நாடு

அலைபேசிக்குள் 'அலைபாயும் மனசு' சீரழியும் 'இளம் தளிர்கள்': கண்காணியுங்கள், பெற்றோரே

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
திருப்பூர்:''சமூக வலைதளங்களால், மாணவ, மாணவிகளின் கவனம் சிதறாமல் பாதுகாக்க வேண்டிய கடமை, பெற்றோருக்கு உள்ளது; 'இளம் தளிர்'கள் வாழ்க்கை, சீரழிந்து விடக்கூடாது'' என்று திருப்பூரில், மாயமானவர்களை மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விழாவின்போது, அறிவுறுத்தப்பட்டது.திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், காணாமல் போனவர்களை கண்டறிந்து, அவர்களது குடும்பத்தினர்,
அலைபேசிக்குள் 'அலைபாயும் மனசு' சீரழியும் 'இளம் தளிர்கள்': கண்காணியுங்கள், பெற்றோரே

திருப்பூர்:''சமூக வலைதளங்களால், மாணவ, மாணவிகளின் கவனம் சிதறாமல் பாதுகாக்க வேண்டிய கடமை, பெற்றோருக்கு உள்ளது; 'இளம் தளிர்'கள் வாழ்க்கை, சீரழிந்து விடக்கூடாது'' என்று திருப்பூரில், மாயமானவர்களை மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விழாவின்போது, அறிவுறுத்தப்பட்டது.

திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், காணாமல் போனவர்களை கண்டறிந்து, அவர்களது குடும்பத்தினர், உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிறுபூலுவபட்டியில், நேற்று நடந்தது. ''கடந்த மூன்று மாதங்களில், மாயமானவர்கள் தொடர்பாக, 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; மொத்தம், 79 பேர் கண்டறியப்பட்டனர்'' என்று போலீஸ் கமிஷனர் வனிதா தெரிவித்தார்.நிகழ்ச்சியில், வீட்டில் இருந்து சிறுவர், சிறுமியர், இளைஞர்(ஞி)கள் மாயமானதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.என்ன காரணம்?குடும்ப பிரச்னை, கருத்து வேறுபாடு, தகாத உறவு, தேர்வில் தோல்வி, காதல் வயப்படுதல், தொழில் நஷ்டம் போன்ற பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறி மாயமாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


latest tamil news


இவற்றில் பெரும்பாலானவை, காதல், தகாத நட்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி மாயமாகும் நபர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. வளரிளம் (டீன் ஏஜ்) பருவத்தில் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


சீரழிந்த சிறுமிவேலம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம், 20ம் தேதி வீட்டை விட்டு மாயமானார். பெற்றோர் புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமிக்கு 'ஆன்லைன் வகுப்பு'க்காக பெற்றோர் மொபைல் போன் வாங்கி கொடுத்தனர். மொபைல் போனும் கையுமாக இருந்த சிறுமி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், சமூக வலைதள பக்கத்தில் கணக்கை துவக்கினார். அப்போது, சிறுமிக்கு, ராமநாதபுரத்தை சேர்ந்த, 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபரை திருப்பூர் வரவழைத்து, சிறுமி மாயமானது தெரிந்தது.

திருப்பூரில் இருந்து புறப்பட்டு, சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி பகுதியில், இருவரும் சுற்றி வந்தனர். சிறுமியிடம், அந்த வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். ஐந்து நாட்களுக்கு பின், சிறுமியை போலீசார் மீட்டனர். வாலிபர் மீது 'போக்சோ' வழக்கு பதியப்பட்டது.மேலும், சிறுமியின் மொபைலில், பெற்றோரின் வங்கி கணக்கு விபரங்கள் அடங்கிய, 'பேமென்ட் ஆப்' பயன்படுத்தி வந்தார். இதன் மூலம் ஐந்து நாட்களும், 20 ஆயிரம் ரூபாய் எடுத்து செலவு செய்தது தெரிந்தது.பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கி தருவதோடு நிற்காமல், அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
22-ஆக-202118:50:02 IST Report Abuse
DVRR நான் தாத்தா என்பதற்கு கடவுளுக்கு மிகவும் நன்றி சொன்னேன்???ஏன்???நல்லவேளை அப்பாவாக இந்த நேரத்தில் இருந்திருந்தால் அம்மாடி நம்ம வாழ்க்கை ஐயோ நாராயண
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
22-ஆக-202118:41:13 IST Report Abuse
DVRR என்னுடைய பேரன் (4 வயது) வீடியோ மொபைலில் போட்டால் தான் சாப்பிட வாயை திறப்பான். அம்மா தனியாக வெளியே போக அனுமதிக்கமாட்டான் ஆனால் அவனுக்கு வீடியோ போட்டு விட்டால் எங்கே வேணா அவள் வெளியே போகட்டும் என்று அதிலேயே குறியாக இருப்பான். மிக மிக மோசமான நிலைக்கு நம் குழந்தைகள் (இளம்) சமுதாயத்தை இந்த மொபைல் கொண்டு சென்றுவிட்டது. ஓ நாராயணா இதற்கு ஒரு வழி சொல்லப்பா
Rate this:
Cancel
yshsu -  ( Posted via: Dinamalar Android App )
22-ஆக-202118:18:05 IST Report Abuse
yshsu for the all this cinema is prevalent,poruki hero, and the rowdy, child love wcenes are the major impact of this generation.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X