சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரிபூரணநத்தத்தில் மறியல் செய்ய முயற்சி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பரிபூரணநத்தத்தில் பாதியில் நின்ற உயர்மின் பாதையை பணியை முடிக்க கோரி மறியல் செய்ய முயன்றவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.சேத்தியாத்தோப்பு அடுத்த பரிபூரணநத்தம் கிராமத்தில் குறைவான மின் அழுத்தம் காரணமாக வீடுகளில், மின்மோட்டார், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்டவை பயன்படுத்த முடியாமல் அவதிடைந்தனர். பின், இணைப்பு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பரிபூரணநத்தத்தில் பாதியில் நின்ற உயர்மின் பாதையை பணியை முடிக்க கோரி மறியல் செய்ய முயன்றவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த பரிபூரணநத்தம் கிராமத்தில் குறைவான மின் அழுத்தம் காரணமாக வீடுகளில், மின்மோட்டார், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்டவை பயன்படுத்த முடியாமல் அவதிடைந்தனர். பின், இணைப்பு பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டு மின்பாதை அமைக்கும் பணி நடந்தது. இந்த மின்பாதை அமைப்பதால் விபத்து அபாயம் இருப்பதாக தெற்கு தெருமக்கள் தடுத்து நிறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் நிறுத்தப்பட்ட பணியை விரைந்து முடிக்க கோரி நேற்று பகல் 12.30 மணியளவில் பரிபூரணநத்தம் பஸ்நிறுத்தம் அருகில் பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்த ஒரத்துார் சப்இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் சென்று பேசினர். அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் 1.00 மணியளவில் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X