பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணிவது கேள்விக்குறி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பொது மக்கள் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிவதால், கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்துத்துறை சார்பில் முக கவசம் அணிவது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது. முக கவசம் அணியாத பாதசாரிகள்,

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பொது மக்கள் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிவதால், கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

.கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்துத்துறை சார்பில் முக கவசம் அணிவது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது. முக கவசம் அணியாத பாதசாரிகள், வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கப்பட்டது.

வணிக நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் விதிமுறைகளை மீறினால், நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது.மூன்றாம் அலை தாக்கம் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பொதுவெளியில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வணிக நிறுவனங்கள், மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் பொது மக்கள் சுற்றி வருவதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X