பெய்தது மழை... மக்கள் மகிழ்ச்சி!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெய்தது மழை... மக்கள் மகிழ்ச்சி!

Added : ஆக 22, 2021
Share
திருப்பூர்:இரண்டரை மாதங்களாக போக்கு காட்டிய தென்மேற்கு பருவமழை, திடீரென கருணை காட்டியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த மே மாதம் துவங்கி செப். வரை பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை, இதுவரை இல்லாத அளவுக்கு போக்கு காட்டியது. கடந்த இரண்டரை மாதங்களில், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை இல்லை.தென்மேற்கு பருவமழையை நம்பி, மானாவாரி பயிர் சாகுபடி
 பெய்தது மழை... மக்கள் மகிழ்ச்சி!

திருப்பூர்:இரண்டரை மாதங்களாக போக்கு காட்டிய தென்மேற்கு பருவமழை, திடீரென கருணை காட்டியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த மே மாதம் துவங்கி செப். வரை பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை, இதுவரை இல்லாத அளவுக்கு போக்கு காட்டியது. கடந்த இரண்டரை மாதங்களில், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை இல்லை.தென்மேற்கு பருவமழையை நம்பி, மானாவாரி பயிர் சாகுபடி செய்வதில்லை. இருப்பினும், மரம் வளர்ப்பு, தீவனப்புல் வளர்ப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் சரியாமல் இருக்க, தென்மேற்கு பருவமழை மிக அவசியம்.கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில், தென்மேற்கு பருவமழை பெய்ததால், மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு போதிய தண்ணீர் வந்தது. இருப்பினும், தாராபுரம், காங்கயம், திருப்பூர், அவிநாசி, பல்லடம் தாலுகாக்கள், வறட்சியில் சிக்கியுள்ளன.இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, தென்மேற்கு பருவமழை நேற்று கருணை காட்டியது. மங்கலம், இடுவாய், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதிகள், திருப்பூர் நகரப்பகுதிகளில் ஒரு மணி நேரம் அளவுக்கு, கனமழை பெய்தது. முன்னதாக, திருப்பூர் நகரப்பகுதியில், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.கிராமப்புறங்களில், கனமழை பெய்ததால், மானாவாரி நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு இருக்காது; மானாவாரி சாகுபடிக்கு, நிலத்தை தயார்படுத்தி வைக்கலாம் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாநகரில் அவதி!மாநகராட்சியின் மையப்பகுதி வார்டுகளில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், சாக்கடை கால்வாய், கான்கிரீட் ரோடு, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இதனால், பல இடங்களில் ரோடுகள் முழுவதும் சேதமாகி, மண்மேடாக மாறியுள்ளன. நேற்று திடீரென கனமழை பெய்ததால், மெயின் ரோட்டில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியது.ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் பாலம், ஊத்துக்குளி ரோடு மற்றும் ஒற்றைக்கண் பாலம் பகுதிகளில், கழிவுநீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மழை துவங்கிவிட்டதால், நகரப்பகுதியில் தார்ரோடு இல்லாத பகுதிகள், பணிகள் நடக்கும் பகுதிகள், நெல் வயல்களை போல் சேறும், சகதியுமாக மாறிவிடுமென, பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X