பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு மனை பட்டா 'கனவு': ஆர்ப்பரிப்புடன் திரளும் மக்கள்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பூர் மாவட்டம் பனியன் மற்றும் சார்பு தொழிற்சாலைகள் நிறைந்த தொழில்நகரம். பெரும்பாலானோர் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் இங்கு வந்து தங்கி வேலை செய்கின்றனர்.வேலை பார்க்கும் நிறுவனங்கள் அளிக்கும் குடியிருப்புகளிலும், வெளி நபர்களின் வீடுகளில் வாடகைக்கும் தங்கியுள்ளனர். பெரும்பான்மையான கூலி தொழிலாளர்கள் நீண்ட காலமாக புறம்போக்கு

திருப்பூர் மாவட்டம் பனியன் மற்றும் சார்பு தொழிற்சாலைகள் நிறைந்த தொழில்நகரம். பெரும்பாலானோர் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் இங்கு வந்து தங்கி வேலை செய்கின்றனர்.வேலை பார்க்கும் நிறுவனங்கள் அளிக்கும் குடியிருப்புகளிலும், வெளி நபர்களின் வீடுகளில் வாடகைக்கும் தங்கியுள்ளனர். பெரும்பான்மையான கூலி தொழிலாளர்கள் நீண்ட காலமாக புறம்போக்கு இடங்களிலும் வசிக்கின்றனர்.ஏராளமானோர் புறநகர் பகுதியில் சிறிய அளவில் இடம் வாங்கி சிறுகச் சேர்த்த பணத்தில் சிறிய அளவில் வீடு கட்டியும் வசிக்கின்றனர்.இதுதவிர வாடகை வீடுகளில் வசிக்கும் பலரும் அரசு வழங்கும் இலவச மனைப்பட்டாக்களைப் பெற்று அதில் வசிக்கும் எண்ணத்தில் உள்ளனர். இது போன்ற மக்கள் பெரும்பாலும் கலெக்டர் குறை கேட்பு நாள், ஜமாபந்தி நிகழ்வு உள்ளிட்டவற்றில் இதற்காக மனு அளிப்பது வழக்கம்.இதை பயன்படுத்தி கொள்ளும் சில அரசியல் பிரமுகர்கள் தங்கள் ஆதரவு நபர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நபர்களையும் இதற்காகத் தயார்படுத்தி, மனைப்பட்டா கேட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்துகின்றனர். அவ்வகையில், பலரும் கூட்டம் கூட்டமாக இதற்காக விண்ணப்பிக்கின்றனர். புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், மனைப்பட்டா கேட்டு மனு அளிக்கும் கூட்டம் தற்போது அதிகளவில் காணப்படுகிறது.இதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்து தர ஆட்கள் நியமித்து அதற்கு கட்டணம் வசூலிக்கும் நிகழ்வுகளும் மாவட்டத்தின் சில பகுதிகளில் நடைபெற்று வருகிறது.அதிகாரிகள் கூறுகையில், 'சமீப நாட்களாக பட்டா கேட்டு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்தாலே போதும். ஆனால், சிலர் மக்களை கூட்டமாக அழைத்து வருகின்றனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X