பொது செய்தி

தமிழ்நாடு

ரோடு மேல ரோடு... வீட்ல புகும் மழைநீரு!

Added : ஆக 22, 2021
Share
Advertisement
பல நேரங்களில், விளைவுகள் தெரியாமலேயே, திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன; மக்கள் படும் துயரம் புரியாமலே, இவை தொடர்கின்றன; இதற்கு, உதாரணம் இதோ...பல்லடம் நகராட்சி, மாணிக்காபுரம் ரோடு, பெரியார் நகரில் உள்ள வீதிகளில், ரோடு அமைக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.அதற்கான, ஆய்வு பணிகள் நடந்த போது, பழைய ரோட்டை அகற்றி விட்டு ரோடு அமைக்குமாறு பொதுமக்கள் கூறினர்.ஒப்பந்ததாரர்
 ரோடு மேல ரோடு... வீட்ல புகும் மழைநீரு!

பல நேரங்களில், விளைவுகள் தெரியாமலேயே, திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன; மக்கள் படும் துயரம் புரியாமலே, இவை தொடர்கின்றன; இதற்கு, உதாரணம் இதோ...பல்லடம் நகராட்சி, மாணிக்காபுரம் ரோடு, பெரியார் நகரில் உள்ள வீதிகளில், ரோடு அமைக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.அதற்கான, ஆய்வு பணிகள் நடந்த போது, பழைய ரோட்டை அகற்றி விட்டு ரோடு அமைக்குமாறு பொதுமக்கள் கூறினர்.ஒப்பந்ததாரர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், புதிய ரோடு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அப்பகுதியினர் கூறுகையில், ஏற்கனவே உள்ள பழைய ரோடு, வீட்டு வாசலை விட உயரத்துக்கு மேல் உள்ளது.அதனால், மழை காலங்களில், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. ஏற்கனவே, உள்ள பழைய ரோட்டை அகற்றிவிட்டு, ரோட்டை தாழ்வாக அமைக்க வேண் டும். ஆனால், பழைய ரோட்டை அகற்ற ஒப்பந்ததாரர் மறுக்கின்றார்.அவ்வாறு செய்வதால், கழிவு நீரும் வெளியே செல்ல இயலாத நிலை ஏற்படும். பழைய ரோட்டை அகற்றி விட்டு ரோட்டை சீரமைக்கா விட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்றனர்.தலைமை செயலர் சொன்னா கேட்கணுமா!

'ரோடு சீரமைப்புப் பணியின் போது, பழைய ரோட்டை அகற்றிவிட்டு புதிய ரோடு போட வேண்டும் என, தமிழக தலைமை செயலர் அறிவுறுத்தி உள்ளார். ஆனால், அதை கவனத்தில் கொள்ளாமல், ரோட்டின் மீதே ரோடு போடப்படும் என்று ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர்,' என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X