பொது செய்தி

தமிழ்நாடு

கர்ம வீரர் காலடிபட்ட கட்டடம்!

Added : ஆக 22, 2021
Share
Advertisement
அவிநாசி:வரலாற்று புத்தகத்தின் பக்கங்களை புரட்டும் போது, ஆச்சர்யத்தால், விழிகள் இமைக்க மறுக்கும். இந்த அனுபவத்தை பலரும் உணர்ந்திருக்கலாம்.'வாழ்ந்தால் அவரை போல வாழணும்... ஆட்சி செய்தால், அவரை போல ஆட்சி செய்யணும்' என, எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் சிலர். அவர்களில், கல்விக்கண் திறந்த, படிக்காத மேதை காமராஜர் குறிப்பிடத்தக்கவர்.அவரது நினைவை தாங்கி நிற்கும்
 கர்ம வீரர் காலடிபட்ட கட்டடம்!

அவிநாசி:வரலாற்று புத்தகத்தின் பக்கங்களை புரட்டும் போது, ஆச்சர்யத்தால், விழிகள் இமைக்க மறுக்கும். இந்த அனுபவத்தை பலரும் உணர்ந்திருக்கலாம்.'வாழ்ந்தால் அவரை போல வாழணும்... ஆட்சி செய்தால், அவரை போல ஆட்சி செய்யணும்' என, எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் சிலர். அவர்களில், கல்விக்கண் திறந்த, படிக்காத மேதை காமராஜர் குறிப்பிடத்தக்கவர்.அவரது நினைவை தாங்கி நிற்கும் விஷயங்கள், தமிழகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. அவ்வரிசையில், அவிநாசி அருகேயுள்ள தெக்கலுாரில், காமராஜரின் நினைவலைகளை சுமந்தபடி, பழமை மாறாமல் காட்சி தந்து கொண்டிருக்கிறது, தபால் நிலைய கட்டடம்.''கடந்த, 1962ல் காமராஜர் முதல்வராக இருந்த போது, தெக்கலுார் வந்த அவர், ஊராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை சமுதாய கூட பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.அத்துடன், அதனருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டத்தையும் திறந்து வைத்தார்,'' எனகிறார் முன்னாள் தெக்கலுார் ஊராட்சி மன்ற தலைவர் ராசப்பன்.அந்த கட்டடம், பின், கால்நடை மருத்துவமனையாக மாறி, தற்போது, தபால் நிலையமாக செயல்பட்டு வருகிறது.பழமை மாறாமல், கிராம மக்களுக்கு சேவையாற்றி வரும் இந்த தபால் நிலைய கட்டடத்தின் சுவற்றில் இருக்கும் காமராஜரின் உருவப்படம், அவரது நினைவலைகளை பசுமரத்தாணியாய் வைத்திருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X