தாலுகா ஆபீசுக்கு பஸ் வசதி இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா ஆபீசுக்கு பஸ் வசதி இல்லை

Added : ஆக 22, 2021
Share
திருப்பூர்:திருப்பூர், செவந்தாம்பாளையத்தில், தெற்கு தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு செல்ல தாராபுரம் ரோடு மற்றும் காங்கயம் ரோடுகளில் இருந்து முறையான பஸ் வசதியில்லை.ஊரடங்குக்கு பின், ஏற்கனவே வந்து கொண்டிருந்த பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. வாகனம் இல்லாதவர்கள், ஆட்டோவில்தான் செல்ல வேண்டியுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், ''கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் இருந்து

திருப்பூர்:திருப்பூர், செவந்தாம்பாளையத்தில், தெற்கு தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு செல்ல தாராபுரம் ரோடு மற்றும் காங்கயம் ரோடுகளில் இருந்து முறையான பஸ் வசதியில்லை.ஊரடங்குக்கு பின், ஏற்கனவே வந்து கொண்டிருந்த பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. வாகனம் இல்லாதவர்கள், ஆட்டோவில்தான் செல்ல வேண்டியுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், ''கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படாது; அந்தந்த தாலுகா அலுவலகத்திலேயே மனு கொடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச பட்டா, உதவி பெற, மனு கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர்.தொலைபேசி மூலம் தெரிவித்தால், முறையான நடவடிக்கை இல்லை. பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். இல்லையேல், வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு, மக்களிடம் மனுவை பெற வேண்டும்'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X