பொது செய்தி

தமிழ்நாடு

நடை பாலமா? 'குடி'மகன் கூடாரமா?

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தலைமை தபால் நிலையம், ஈஸ்வரமூர்த்தி தாய் - சேய் நல விடுதிக்கு வர உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. உயரமான படிக்கட்டுகளுடன் இருப்பதால், பலரும் இப்பாலத்தை பயன்படுத்துவதில்லை.இதனை சாதகமாக்கி, 'குடி'மகன்கள் பாலத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்; பகலிலும், இரவிலும் படுத்துறங்குகின்றனர். மதுபாட்டிலை அங்கேயே
 நடை பாலமா? 'குடி'மகன் கூடாரமா?

திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தலைமை தபால் நிலையம், ஈஸ்வரமூர்த்தி தாய் - சேய் நல விடுதிக்கு வர உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. உயரமான படிக்கட்டுகளுடன் இருப்பதால், பலரும் இப்பாலத்தை பயன்படுத்துவதில்லை.இதனை சாதகமாக்கி, 'குடி'மகன்கள் பாலத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்; பகலிலும், இரவிலும் படுத்துறங்குகின்றனர். மதுபாட்டிலை அங்கேயே வீசியெறிகின்றனர். உணவு பொட்டலங்களும் வீசப்படுவதால் அசுத்தம் ஏற்படுகிறது.மாநகராட்சியின் சுகாதார ஊழியர் இதனை கண்டுகொள்வதில்லை. அவ்வழியாக, நடந்து செல் வோர் முகம்சுளிக்கின்றனர். மாநகராட்சி துாய்மை பணி மேற்கொள்ள வேண்டும். போலீசார் ரோந்து பணி மேற்கொள்ளும் போது, சமூக விரோத செயல்கள் நடக்கிறதா என கண்காணிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X