பொது செய்தி

தமிழ்நாடு

வேதாரண்யத்தில், மற்றொரு 'திருப்பூர்!'

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பூர்:'பல திருப்பூர்'கள் தமிழகம் எங்கும் உருவாக வேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக முன் வைக்கப்படுகிறது. இதற்கு அச்சாரமாக திருப்பூரை சேர்ந்த நான்கு நிறுவனங்கள், வேதாரண் யத்தில் ஆடை உற்பத்தி பிரிவை நிறுவி, இயக் கத்தை துவக்கியுள்ளன.தொழிலாளர் பற்றாக்குறை, உற்பத்தி செலவினம் அதிகரிப்பால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் திணறிவருகின்றன. இதற்கு தீர்வாக,

திருப்பூர்:'பல திருப்பூர்'கள் தமிழகம் எங்கும் உருவாக வேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக முன் வைக்கப்படுகிறது. இதற்கு அச்சாரமாக திருப்பூரை சேர்ந்த நான்கு நிறுவனங்கள், வேதாரண் யத்தில் ஆடை உற்பத்தி பிரிவை நிறுவி, இயக் கத்தை துவக்கியுள்ளன.தொழிலாளர் பற்றாக்குறை, உற்பத்தி செலவினம் அதிகரிப்பால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் திணறிவருகின்றன. இதற்கு தீர்வாக, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், ஆயத்த ஆடை பூங்கா அமைக்க உள்ளது, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா).36 ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து, மத்திய, மாநில அரசு மானியத்துடன், ரூ.120 கோடி மதிப்பீட்டில், 'வேதா அப்பேரல் பூங்கா'வை உருவாக்க உள்ளன. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி பெறப்பட்டு, மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில், 2 பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டு, வேதாரண்யம் சுற்றுப்பகுதி தொழிலாளர்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. பூங்கா திட்டத்தில் அங்கம்வகிக்கும் திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தற்போது முதலே தங்கள் ஆடை தயாரிப்பு பிரிவுகளை வேதாரண்யத்தில் நிறுவ துவங்கிவிட்டன.பூங்கா அமைய உள்ள இடத்துக்கு அருகே, தனியார் கட்டடங்களை வாடகைக்கு பெற்று, தையல் முதல் பேக்கிங் வரையிலான பிரிவுகளை நிறுவிவருகின்றனர்.இதுவரை, திருப்பூரை சேர்ந்த மூன்று உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள்; ஒரு ஏற்றுமதி நிறுவனம், வேதாரண்யத்தில், வாய்மேடு, கத்தரிபுலம் பகுதிகளில் தங்கள் உற்பத்தி கிளைகளை ஏற்படுத்தி, முழுமையான இயக்கத்தையும் துவக்கிவிட்டன. இந்நிறுவனங்களில், திறன் பயிற்சி முடித்த உள்ளூர் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர்.'டீமா' சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:'வேதா அப்பேரல் பார்க்' திட்டம், மத்திய அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது. அரசு அனுமதி கிடைத்தவுடன், கட்டுமான பணிகள் துவங்கப்படும். பூங்காவை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காகவும், தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்காகவும், திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தற்போது முதலே வேதாரண்யத்தில் தங்கள் உற்பத்தி பிரிவுகளை கொண்டுசெல்ல துவங்கிவிட்டன.திருப்பூரில் ஓவர்லாக் பிளாட்லாக், சிங்கர் டெய்லர் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.வேதாரண்யம் பயிற்சி மையங்களில், தொழிலாளருக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. திருப்பூரிலிருந்து துணி வெட்டி எடுத்துச்செல்லப்பட்டு, வேதாரண்யத்தில், தைத்து முழுமையான ஆடையாகிறது. இதன்மூலம், தொழிலாளர் பற்றாக்குறை நீங்கி, நிறுவனங்களின் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.கட்டுமான தொழில் சிறக்கும்!

தமிழகத்தில், பல்வேறு இடங்களில், தொழில் பூங்காக்கள் உருவானால்தான், தொழில் சிறப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். தொழில் பூங்காக்கள் உருவாகும்போது கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X