பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி: மக்கள் ஏமாற்றம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, 14வது வார்டு ரங்கநாதபுரம் துவக்கப்பள்ளியில், நேற்று கொரோனா தடுப்பூசி முதல் 'டோஸ்' போடப்பட்டது.இதற்காக, காலை 100 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. தடுப்பூசி போட்டு கொள்ளும் ஆர்வத்தில், பொதுமக்கள், அதிகாலை 4:00மணி முதல் வரிசையில் நின்று டோக்கன் பெற்றனர்.ஆனால், வரிசையில் நின்ற 86 பேருக்கு மட்டும் ஊசி போட்ட, சுகாதார துறையினர்நுாறு

அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, 14வது வார்டு ரங்கநாதபுரம் துவக்கப்பள்ளியில், நேற்று கொரோனா தடுப்பூசி முதல் 'டோஸ்' போடப்பட்டது.இதற்காக, காலை 100 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. தடுப்பூசி போட்டு கொள்ளும் ஆர்வத்தில், பொதுமக்கள், அதிகாலை 4:00மணி முதல் வரிசையில் நின்று டோக்கன் பெற்றனர்.ஆனால், வரிசையில் நின்ற 86 பேருக்கு மட்டும் ஊசி போட்ட, சுகாதார துறையினர்நுாறு பேருக்கு போட்டதாக தெரிவித்தனர். இதனால், மீதமிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், ''எங்களுக்கு போடவேண்டிய தடுப்பூசியை வேறு நபருக்கு போட்டுவிட்டனர். அதிகாலையில் வந்து, காத்திருந்து டோக்கன் பெற்றோம். ஊசி போடாமல் செல்லமாட்டோம்,'' என அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதையறிந்து பள்ளிக்கு வந்த, 15 வேலம்பாளையம் போலீசார், அடுத்தமுறை தடுப்பூசி போடும்போது, உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். என, அனைவரையும் சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X