குழந்தை திருமணம்: அதிகாரிகள் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை திருமணம்: அதிகாரிகள் விசாரணை

Added : ஆக 22, 2021
Share
பல்லடம்:கோவை மாவட்டம், விராலியூரை சேர்ந்தவர், 21 வயது வாலிபர்; டிரைவர். இவரும், பல்லடம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்தனர்.நேற்று, பெற்றோருக்கு தெரியாமல் சிறுமி விராலியூர் சென்றுள்ளார். அங்கு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையறிந்த குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு, காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வருவாய் துறையினருடன்
 குழந்தை திருமணம்:  அதிகாரிகள் விசாரணை

பல்லடம்:கோவை மாவட்டம், விராலியூரை சேர்ந்தவர், 21 வயது வாலிபர்; டிரைவர். இவரும், பல்லடம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்தனர்.நேற்று, பெற்றோருக்கு தெரியாமல் சிறுமி விராலியூர் சென்றுள்ளார். அங்கு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையறிந்த குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு, காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வருவாய் துறையினருடன் நேரடி விசாரணையில் ஈடுபட்டனர். அதில், பெண்ணுக்கு, 14 வயது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் மகளிர் போலீசார், சிறுமிக்கும், பெற்றோருக்கும் உரிய ஆலோசனை வழங்கினர்.இது தொடர்பான விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு, கலெக்டர் அறிவுறுத்தலின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X