பொது செய்தி

தமிழ்நாடு

கழிவுநீருடன் மழைநீர் கட்டடங்களில் புகுந்தது

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி பெரும் அவதி ஏற்பட்டது.பல்லடம் ரோடு, நொச்சிபாளையம் பிரிவு, தாராபுரம் பெரிச்சிபாளையம் தன்னாசி கோவில் பகுதி, ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலம், குமரானந்தபுரம் 60 அடி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருமளவில் தேங்கியது.தாழ்வான பகுதிகளில் உள்ள
 கழிவுநீருடன் மழைநீர் கட்டடங்களில் புகுந்தது

திருப்பூர்:திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி பெரும் அவதி ஏற்பட்டது.பல்லடம் ரோடு, நொச்சிபாளையம் பிரிவு, தாராபுரம் பெரிச்சிபாளையம் தன்னாசி கோவில் பகுதி, ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலம், குமரானந்தபுரம் 60 அடி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருமளவில் தேங்கியது.தாழ்வான பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்குள் மழைநீர் கழிவு நீருடன் சென்று பாய்ந்தது. நகரில் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் உள்ள அடைப்புகளால், மழை நீர் தொடர்ந்து செல்ல முடியாமல் கழிவு நீருடன் கலந்து ரோட்டில் பாய்ந்தது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் திணறல் ஏற்பட்டது. மழை நின்று நீண்ட நேரமாகியும் பல பகுதிகளில் ரோட்டில் மழை நீர் தேங்கியும், சில இடங்களில் வழிந்தோடியும் காணப்பட்டது.கழிவு அகற்றம்பல்லடம் ரோடு, நொச்சிப்பாளையம் பிரிவு அருகே கழிவு நீர் கால்வாய் தேங்கி நின்றதால், மழை நீர் செல்ல வழியின்றி பெரும் அவதி ஏற்பட்டது. கழிவு நீருடன், மழை நீரும் கலந்து ரோட்டிலும், அருகேயுள்ள கட்டடங்களிலும் நுழைந்து தேங்கியது.பல்லடம் ரோட்டில் வாகன போக்குவரத்து நெரிசலால், சிரமம் ஏற்பட்டது. மழை நின்ற சிறிது நேரத்தில், பொக்லைன் வாகனத்துடன் வந்த மாநகராட்சி ஊழியர்கள், சாக்கடை கால்வாயில் தேங்கி கிடந்த மண் உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தினர். இதனால், தேங்கி நின்ற கழிவு நீர் வடிந்து, சாக்கடை கால்வாயில் சென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X