சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெரிசலுக்கு தீர்வு காண வாகனங்களுக்கு 'பூட்டு'

Added : ஆக 22, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி பேரூராட்சியில், சேவூர் ரோடு, கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ரத வீதி உள்ளிட்ட இடங்களில் வாகன நெரிசல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ரோட்டோரம் உள்ள கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் தங்கள் வாக னங்களை கடைகளுக்கு முன் நிறுத்தி கொள்வது, முக்கிய காரணமாக கூறப்படுகிறது.அதே நேரம், ரோட்டோரம் உள்ள நகைக்கடைகளுக்கு வருவோர், திருமண மண்டபத்தில் நடக்கும்

அவிநாசி:அவிநாசி பேரூராட்சியில், சேவூர் ரோடு, கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ரத வீதி உள்ளிட்ட இடங்களில் வாகன நெரிசல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ரோட்டோரம் உள்ள கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் தங்கள் வாக னங்களை கடைகளுக்கு முன் நிறுத்தி கொள்வது, முக்கிய காரணமாக கூறப்படுகிறது.அதே நேரம், ரோட்டோரம் உள்ள நகைக்கடைகளுக்கு வருவோர், திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், பங்கேற்போர் ரோட்டோரமே வாகனங்களை 'பார்க்கிங்' செய்து கொள்வதும், நெரிசலுக்கு முக்கிய காரணம் என போலீசார் கூறுகின்றனர். வாகன நெரிசலை சமாளிக்க முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறுகின்றனர்.இதனால், ரோட்டோரம் உள்ள திருமண மண்டப உரிமையாளர்களை அழைத்து, ஆலோசனை நடத்திய போலீசார், தங்களுக்கான 'பார்க்கிங் தளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என. அறிவுரை வழங்கினர். ஆனால், அந்த அறிவுரை, பேச்சளவில் நின்று போனது.போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுத்தும் வகையில், புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட், சேவூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களின் சக்கரங்களுக்கு, போக்குவரத்து போலீசார் பூட்டு போடுகின்றனர்.அவிநாசியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வருவாய்த்துறையினர், பேரூராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து, 'பார்க்கிங்' பிரச்னைக்கு தீர்வு காண்பதற்குரிய கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X