பொது செய்தி

தமிழ்நாடு

கருணை பொங்கும் உள்ளத்துடனும், ஆசிரியர்கள்: மாணவிகளுக்கு மொபைல்போன் பரிசளிப்பு

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பூர்: கொரோனா காலம் கற்றல், கற்பித்தல் முறைகளில் டிஜிட்டலை புகுத்திவிட்டது. தவிர்க்க முடியாத கல்வி முறையாக இருக்கும் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமாவதில்லை. அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே அல்லாடும் விளிம்புநிலை மக்களுக்கு, ஆன்லைன் உபகரணங்கள் மூலம் கல்வி கற்பது இயலாததாகிறது.இதனால், அரசு பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
கருணை பொங்கும் உள்ளத்துடனும், ஆசிரியர்கள்: மாணவிகளுக்கு மொபைல்போன் பரிசளிப்பு

திருப்பூர்: கொரோனா காலம் கற்றல், கற்பித்தல் முறைகளில் டிஜிட்டலை புகுத்திவிட்டது. தவிர்க்க முடியாத கல்வி முறையாக இருக்கும் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமாவதில்லை. அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே அல்லாடும் விளிம்புநிலை மக்களுக்கு, ஆன்லைன் உபகரணங்கள் மூலம் கல்வி கற்பது இயலாததாகிறது.

இதனால், அரசு பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்கள் பலர் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.இத்தகைய மாணவர்களை தேர்வு செய்து, புதிய ஸ்மார்ட்போன்களை பரிசளித்து, அவர்களின் கல்விக்கண்ணை திறந்து வைத்துள்ளனர் ஜெய்வாபாய் மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்.பெற்றோர் இல்லாத மற்றும் தந்தை மட்டும் இல்லாத மாணவியர்களில், ஸ்மார்ட்போன் இல்லாத, 15 மாணவியருக்கு, தலா 5 ஆயிரத்து, 500 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், மொபைல் போன் இருந்தும் ரீசார்ஜ் செய்ய முடியாமல் சிரமப்படும் மாணவியர், 50 பேரை தேர்வு செய்து, மூன்று மாதத்திற்கு, 'டேட்டா ரீசார்ஜ்' செய்துள்ளனர்.


மாணவி முத்துசெல்வி:


நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். அம்மா - அப்பா இருவரும்காய்கறி வியாபாரம் செய்கின்றனர். ஊரடங்கு சமயத்தில் அப்பாவுக்கு உடல்நிலை மிக மோசமாக இருந்தது. கையிருப்பில் இருந்த பணம் அப்பா சிகிச்சைக்கே சரியாக இருந்ததால் மொபைல்போன் வாங்க முடியவில்லை. சக மாணவர்களை போல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் தவித்தேன். மொபைல் வந்த பிறகு, எல்லாவகுப்புகளிலும் பங்கேற்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது.


மாணவி சாந்தசீலா:


எனக்கு அப்பா- அம்மா இல்லாததால், பாட்டியும் நானும் மட்டுமே ஒரே வீட்டில் வசிக்கிறோம். பாட்டி வீட்டுவேலை, சமையல் வேலைக்கு செல்கிறார். மொபைல் போன் வாங்கும் அளவுக்கு வசதியில்லை.பிளஸ்2 படிக்கும் எனக்கு, ஆன்லைன் வகுப்பு கனவாக இருந்தது. மொபைல் போன் கிடைத்ததும், தினமும் ஒரு பாடத்திற்கு ஒரு மணி நேரம் என, 3 பாடத்திற்கான வகுப்புகளில் பங்கேற்க முடிகிறது.


சாத்தியமாயிற்று!


தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறுகையில், ''மொத்த மாணவியர்களில், 1,196 பேர் பிளஸ் 2 படிக்கின்றனர். பத்தாம் வகுப்பில், 690 பேர் உள்ளனர். இதில் இக்கட்டான சூழலில் இருந்து வருபவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்கள், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காதவர்களாக தேர்வு செய்து காரணம் அறிந்து அனைவரது தேவைகளையும் நிவர்த்தி செய்துள்ளோம். தற்போது, 99.9 சதவீத மாணவியர் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கின்றனர். பள்ளியில் உள்ள, 120 ஆசிரியர்களின் உதவியால் இது சாத்தியமாயிற்று,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X