பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.ஒரு கோடி செலவில் நலத்திட்ட பணி சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
நெய்வேலி : வடக்குத்து ஊராட்சி, காந்தி கிராமத்தில் புதிய போர்வெல், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி மற்றும் மன்னன் நகரில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,நேற்று துவக்கி வைத்தார்.மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியில் ரூ. ஒரு கோடி பெற்று குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மக்களுக்கு தேவையான நலத்திட்ட பணிகளை சபா
 ரூ.ஒரு கோடி செலவில் நலத்திட்ட பணி சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கம்

நெய்வேலி : வடக்குத்து ஊராட்சி, காந்தி கிராமத்தில் புதிய போர்வெல், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி மற்றும் மன்னன் நகரில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,நேற்று துவக்கி வைத்தார்.

மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியில் ரூ. ஒரு கோடி பெற்று குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மக்களுக்கு தேவையான நலத்திட்ட பணிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நிறைவேற்றி வருகிறார். இதில் வடக்குத்து ஊராட்சி, காந்தி கிராமத்தில் புதிய போர்வெல், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி மற்றும் மன்னன் நகரில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியை நேற்று துவக்கி வைத்தார்.

அண்ணா கிராம விரிவாக்கத்தில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் மூலம் அமைக்கப்பட்ட 850 அடி ஆழ போர்வெல்லுக்கு மின் இணைப்பு வழங்கி அண்ணா கிராம விரிவாக்கம், சக்தி நகர், ஸ்ரீசக்தி நகர், கே.எஸ்.கே., நகர், சீனிவாசா அவென்யூ ஆகிய பகுதிகளில் தண்ணீர் பிரச்னை முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டது. ஜெயப்பிரியா நகரில் புதிய போர்வெல், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிக்கு மோட்டார், உதிரிப்பாகங்கள், மின் இணைப்பு வழங்கி மின் மோட்டாரையும் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.விரைந்து செயல்பட்டு தரத்துடன்கூடிய பணிகளை நிறைவேற்றிய குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ.,சதீஷ்பாபு, வடக்குத்து மின்சார துறை இளமின்பொறியாளர் சந்தானசாமி, வணிக ஆய்வாளர் அறிவழகன் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளையும் பாராட்டினார்.

வடக்குத்து ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர் சடையப்பன், ஊராட்சி செயலர் எழிலரசன், வார்டு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், ராஜபூபதி, கிளைச் செயலாளர்கள் வாஜித், அந்தோணிதாஸ், பிச்சையா, சங்கர், உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X